
ரோஸ் வாட்டர் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிசெப்டிக் பண்புகள் கொண்டது. இது சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. ஆயுர்வேத வைத்தியத்தில் இதை புண்கள் மற்றும் தீக்காயங்கள் குணப்படுத்த பயன் படுத்துவார்கள். இது முகத்தில் கருமை மற்றும் பருக்களின் வடுக்களைப் போக்கக்கூடியது. இதில் உள்ள சி சத்து அரிப்பு மற்றும் சோரியாஸிஸ் போன்றவற்றை குணப்படுத்துகிறது. பருக்களால் ஏற்படும் வீக்கங்களைத் தடுக்கிறது.
ரோஜா இதழ்களில் அதிக அளவு வைட்டமின் ஏ, பி ,ஈ போன்றவைகளும் ஆன்டிஆக்சிடண்டுகளும் நிறைந்துள்ளதால் இது ஃப்ரீராடிகல்களால் ஏற்படும் அழுத்தத்தை போக்கி ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் நோயெதிர்ப்பிற்கு உதவும் திசுக்களை வலுப்படுத்துகிறது.
இந்த ரோஸ் வாட்டர் எல்லா அழகு சாதனங்களிலும் உபயோகிக்கப்படுகிறது. சூரிய அல்ட்ரா வயலெட் கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் கொலாஜன் அதிகரிக்கச் செய்வதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை தக்கவைக்கிறது. இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக்க உதவுகிறது.
மேக் அப்பில் இது முக்கியமான பொருளாகிறது. நீங்கள் மேக்கப் போடுவதற்கு முன் இதை உபயோகித்தால் நீண்ட நேரம் புத்துணர்வோடு இருப்பீர்கள் ஆனால் படுக்கப் போகுமுன் மேக்கப்பை கலைத்துவிட்டு உறங்க வேண்டும்.
இந்த ரோஸ் வாட்டர் முகத்தில் ஊடுருவதால் நல்ல நீரேற்றத்துடன் வைக்கிறது. வறண்ட தன்மையைத் தடுக்கிறது. வறண்ட முகம் நீரேற்றத்துடனும் நல்ல நிறமும்பெற உதவுகிறது. முகச் சுருக்கத்தை தடுக்கிறது. முகத்தை இறுக்கமாக வைக்கிறது. முகத்துவாரங்கள் அடைபடாமல் காக்கிறது.
ரோஸ் வாட்டர் அதிக அளவு சீபத்தைக் கட்டுப் படுத்துகிறது. உங்கள் சருமத்தில் இயற்கையான எண்ணெயை தவழச் செய்கிறது. குளிர் காலங்களில் சருமம் வறண்டு விடாமல் செய்கிறது. உடல் பிஹெச் அளவை சமச்சீராக வைக்கிறது. ப்ளாக் ஹெட் மற்றும் ஒயிட் ஹெட் போன்றவற்றை நீக்குகிறது அதிக எண்ணெய்த் தன்மையை தடுக்கிறது. இதன் ஆன்டிஆக்சிடண்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
இதை எப்படி பயன்படுத்துவது?
உங்கள் சருமம் வறண்டு இலையில் இருந்தால் பயன்படுத்தவும்.
உங்கள் முகம் பளிச்சென்று ஆக இத்துடன் சிறிது களிமண் கலந்து பயன்படுத்தலாம்.
மேக்கப்பிற்கு முன் இதை முகத்தில் தடவி காய்ந்த பிறகு மேக்கப் போடவும்
வெயில் காலங்களில் குளுமையாக்க முகத்தில் ரோஸ் வாட்டர் தடவவும்.
தூய்மையான ரோஸ் வாட்டரில் செயற்கை கலர் சேர்க்காமல் உள்ளதா என்பதை கவனிக்கவும். இதை க்ளென்சர் சீரம் மற்றும் மாய்ச்சரைசர் இவற்றோடு சேர்த்தும் பயன்படுத்தலாம். இந்த ரோஸ் வாட்டர் மற்ற ஆயில்களுடன் கலந்து அரோமா தெரபியில் பயன்படுத்தப்படுகிறது.