Aroma Oils
Aroma Oils

Aroma Oils: சரும அழகை மேம்படுத்தும் அரோமா எண்ணெய்கள்! 

Published on

அரோமா எண்ணெய்களை சாதாரண எண்ணெயுடன் கலந்தே மசாஜ் செய்ய உபயோகப்படுத்தலாம். 100 மில்லி சாதாரண எண்ணெயுடன் இரண்டு அல்லது மூன்று துளிகள் அரோமா எண்ணெய்  கலந்து உபயோகப்படுத்த வேண்டும். அந்த எண்ணெய்களால் சருமம் பொலிவு பெறும் . இந்த எண்ணையால் என்ன பயன்? அந்த எண்ணெய்களை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும்? என்பதனைப் பற்றிய தகவலை இக்குறிப்பில் காண்போம். 

  1. லாவண்டர் எண்ணெய்: இது எல்லா வகை சருமத்தினருக்கும் ஏற்றது. 

  2. காஸ்டஸ்: இது சரும பராமரிப்புக்கு மிகச் சிறந்த எண்ணையாகும். நூறு கிராம் சாதாரண எண்ணெயு டன் ஒரு துளி காஸ்டஸை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும். 

  3. ஃப்ராங்கின்சென்ஸ்: இந்த எண்ணெய் சருமத்திற்கு ஊட்டத்தைக் கொடுப்பதோடு முகச்சுருக்கத்தை நீக்கி பளபளப்பையும், பொலிவையும் தரும். 

  4. நீம் எண்ணெய்: இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள கிருமிகள் அகன்று பருக்கள் மறையும். 

  5. நிரோலி எண்ணெய்: இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதால் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை கொடுக்கும். 

  6. ஆல்மண்ட் எண்ணெய்: இந்த எண்ணெய் எல்லா வகை சருமத்தினருக்கும் மசாஜ் செய்ய ஏற்றது.

  7. ஆப்பிரிக்காட்: இந்த எண்ணெய் வறண்ட, வயதான, சென்சிடிவ் ஆகிய சருமங்களுக்கு மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.

  8. ஈவினிங் பிரைம் ரோஸ்: இந்த எண்ணெய் வறண்ட மற்றும் செதில் போல் உள்ள சருமத்திற்கு ஏற்றது. 

  9. ஆலிவ் எண்ணெய்: இதுவும் பொலிவிழந்த சருமத்திற்கு மசாஜ் செய்ய மிகவும் ஏற்றது. 

  10. வீட் ஜெம்: இந்த எண்ணெய் வறண்ட மற்றும் உலர்ந்த சருமத்திற்கு ஏற்றது. 

  11. அஷ்வகந்தா: இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் சருமத்திற்கு ஊட்டத்தையும் பாதுகாப்பையும் தரும். 

  12. கேலன்டூலா எண்ணெய்: இந்த எண்ணையைக் கொண்டு மசாஜ் செய்வதால் நல்ல அழகை கொடுப்பதோடு சருமத்தில் உள்ள புண் வெடிப்பு தீக்காயங்களையும் சரியாக்கும். 

  13. கேரட் எண்ணெய்: இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதால் சருமத்திற்கு ஊட்டத்தையும் பொலிவையும் கொடுக்கும். 

அரோமா எண்ணெய் ஒரு சிலருக்கு மட்டுமே அலர்ஜியை ஏற்படுத்தும் .எனவே உபயோகப்படுத்துவதற்கு முன்பு முகர்ந்து பார்த்து அதன் மணம் பிடித்திருந்தால் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். 

இதையும் படியுங்கள்:
Deep Voice Tips: உங்கள் குரலை இயற்கையாக ஆழமாக்குவது எப்படி தெரியுமா?
Aroma Oils

அளவுகள்:

பிறந்த குழந்தைகளுக்கு அரோமா எண்ணெயை உபயோகப்படுத்தக் கூடாது. ஒரு வயது முதல் மூன்று வயது குழந்தைகளுக்கு ஒன்று அல்லது மூன்று சொட்டுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மூன்று வயதிலிருந்து ஏழு வயது வரை ஒன்றிலிருந்து மூன்று சொட்டுக்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். ஏழு வயதிலிருந்து 12 வயது வரை 5-லிருந்து 8 சொட்டுக்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

12 வயதிலிருந்து 16 வயது வரை பத்திலிருந்து பதினைந்து சொட்டுகள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். 10மில்லி சாதாரண எண்ணெயைவிட அஞ்சு சொட்டு அரோமா எண்ணெய் கலந்து உபயோகப்படுத்த வேண்டும். முகத்திற்கு மூன்று மில்லிக்கு ஒரு சொட்டும் மொத்தம் 5 மில்லிக்கு மூணு சொட்டும் அரோமா எண்ணெய் கலந்து உபயோகிக்க வேண்டும். இந்த எண்ணையை இரண்டு அல்லது மூன்று வகை அரோமா எண்ணைய்களை கலந்து உபயோகிக்கலாம். 

இப்படி அளவுகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு அரோமா எண்ணெய்களை உபயோகப்படுத்தினால், சருமம் எந்தவித பாதிப்பும் இன்றி அழகுடன் மிளிரும். 

logo
Kalki Online
kalkionline.com