
பணிக்கு செல்லும் பெண்கள் அல்லது வீட்டில் இருக்கும் பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் அழகுக்கு முக்கியத்துவம் ஒப்பனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அன்று விசேஷ நாட்களில் மட்டுமே அழகு நிலையம் சென்ற நிலையில் இன்று தினமும் விதவிதமான அழகுசாதனப் பொருள்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அழகுசாதனப் பொருட்களில் ஏற்படக்கூடிய சில பொதுவான குறைபாடுகள் அல்லது பாதிப்புகளைப் பற்றி சிந்தித்ததுண்டா? இங்கு காண்போம்.
அழகைக் காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் சரும பராமரிப்பு மீதான குறைபாடுகள் இவை.
தயாரிப்புகளின் உட்பொருட்கள் காரணமாக ஒவ்வாமை எதிர்வினைகளாக சிவத்தல், அரிப்பு அல்லது சொறி பாதிப்பு. சில தயாரிப்புகள் சருமத்துளைகளை அடைக்கலாம் அல்லது சருமத்தை எரிச்சலடையச் செய்து, முகப்பருவுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு தரலாம். அதில் சேர்க்கப்படும் கடுமையான பொருட்கள் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, வறட்சி அல்லது எரிச்சலை ஏற்படுத்தும். சருமத்தில் தடவும் தயாரிப்புகள் சூரிய ஒளியைப் தடுத்து ஒளிப்பாதுகாப்பைத் தராமல் சீரற்ற தோல் நிறத்திற்கு வழிவகுக்கும்.
அடுத்து முடிபராமரிப்பு குறைபாடுகள். தரமற்ற தயாரிப்புகள் முடியில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, வறட்சி அல்லது உடையக்கூடிய தன்மைக்கு வழிவகுக்கும். அதிலிருக்கும்
கடுமையான பொருட்கள் உச்சந்தலையை எரிச்சலடையச் செய்து, பொடுகு அல்லது பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். பாதுகாப்பற்ற வண்ணம் கொண்ட தயாரிப்புகள் வண்ணத்தை சேதமடைய செய்தும் கலர்-சிகிச்சை செய்யப்பட்ட முடியை மங்கவும் வைக்கும்.. போதுமான ஈரப்பதம் அற்றவைகளால் மென்மையாக்கும் பலன்களைத் தராமல் சிக்கல் அல்லது முடிச்சுக்கு வழிவகுக்கும்.
இதேபோல் தகுதியற்ற நகம் பராமரிப்பு பொருட்கள் நகங்களை சேதப்படுத்தும். பூஞ்சை தொற்றுக்கு எதிராக போதுமான பாதுகாப்பை வழங்காது. நகங்களில் கறை அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். நெயில் பாலிஷ் அல்லது பிற நக பராமரிப்பு பொருட்கள் நன்றாக ஒட்டாமல் அல்லது சீரான தோற்றத்தை தடுக்கும்.
சில ஒப்பனை பொருட்கள் சரும எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் ஒப்பனைப் பொருள்களில் இருக்கும் ரசாயனங்கள் அனைவருக்கும் பொருந்தாது. சரும தன்மை அல்லது தனிப்பட்ட விருப்பங்களுடன் பொருந்தாமல் இருக்கலாம். இதனால் முழுமையான அல்லது மென்மையான ஒப்பனை வழங்காது. நாள் முழுவதும் நிலைக்காமல் மங்கிப் பொலிவை டல்லாக்கும்.
மேலும் சில தயாரிப்புகள் போலியானதாக இருக்கலாம். அவை பயனற்றதாகவோ அல்லது தீங்கு விளைவிப் பதாகவோ இருக்கலாம். தவறான அல்லது சிரமமான பேக்கேஜிங் இருக்கலாம். அனைத்து சரும வகைகளுக்கும் பொருந்தாத பொருட்கள் இருக்கலாம். தயாரிப்புகளை பயன்படுத்தப்படுவதற்கு முன்பே நாட்கள் கடந்து காலாவதியாகலாம் அல்லது கெட்டுப்போகலாம்.
இவை அனைத்தும் ஒப்பனை நிமித்தம் மேல் பூச்சாக பயன்படுத்தப்படும் பொருள்கள் அடிப்படையில் எதிர்கொள்ளும் பாதிப்புகள். இவற்றை கவனத்தில் வைத்து தகுதியான நிபுணர் பரிந்துரையில் அவரவர் தன்மைக்கு ஏற்ற தரமான ஒப்பனைப் பொருள்களை வாங்கி பயன்படுத்துவது நலம் தரும்.