முகத்தை ஜொலிஜொலிக்க வைக்கும் கோதுமை மாவு ஃபேஸ் பேக் போடலாம் வாங்க!

Wheat flour face pack
Facial image...Image credit - pixabay
Published on

பொதுவாக பெண்கள் பார்லருக்கு சென்று முகத்திற்கு ஃபேஷியல், மசாஜ் செய்து முகத்தை பளபளப்பாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை அழகாக்க முடியும். 

கோதுமை மாவு உபயோகித்து சப்பாத்தி, பூரிதான் போட முடியும் என்பதில்லை. கோதுமை மாவு உபயோகித்து முகம் கழுத்து மற்றும் கைகளை பளபளப்பாகவும் பிரகாசமாகவும் ஜொலிக்கச் செய்ய முடியும். இந்த பதிவில் கோதுமை மாவு ஃபேஸ் பேக் எப்படி போடலாம் என்று அறிந்து கொள்வோம். 

கோதுமை மாவு ஃபேஸ் பேக் போடும் முறை: 

ஒரு கிண்ணத்தில் மூன்று ஸ்பூன் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து இதை பேஸ்ட் போல உருவாக்கிக் கொள்ளவும். 

முதலில் முகத்தை காய்ச்சாத பசும்பால் வைத்து சுத்தம் செய்து கொள்ளவும். சிறிதளவு  பசும்பாலை முகத்தில் தடவி ஒரு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுக்கவும். 

பின்பு கோதுமை மாவு பேஸ்ட்டை அப்ளை செய்யவும். கண் பகுதியை தவிர்த்து விட்டு, கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து முகத்தில் கீழிருந்து மேலாக அப்ளை செய்யவும். 

வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவேண்டும் இது இறந்த சரும செல்களை வெளியேற்றவும் ரத்த ஓட்டத்தை தூண்டவும் உதவும். பாக் காயும் வரை காத்திருக்கவும். ஆனால் முகத்தோடு ஒட்டிப் போகும் அளவு காயவிடக்கூடாது. பத்து நிமிடங்களில் பேக் காயும் வரை பொறுத்திருந்து, லேசாக ஈரப்பதம் இருக்கும்போது முகத்தை சுத்தம் செய்யலாம்.

வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி மென்மையாக பேஸ்பேக்கை ஒத்தி எடுத்து துடைக்கவும். பின்பு இயற்கையான மாய்ஸரைசர் அதாவது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவினால் பளபளப்பாக இருக்கும். பின்பு மென்மையான சோப்பு போட்டு முகத்தை கழுவி விடலாம்.

இதையும் படியுங்கள்:
தினசரி வெந்நீர் குடித்து வந்தால் என்ன ஆகும் தெரியுமா? 
Wheat flour face pack

வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் பிரகாசமாகவும் ஜொலிக்கும். இந்த பேக்கை உபயோகப்படுத்தி முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகளிலும் அப்ளை செய்து கொள்ளலாம். அதிலிருக்கும் கருமையை அகற்றிவிடும்.

கோதுமை மாவு ஃபேஸ் பேக்கின் பயன்கள்; 

கோதுமை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அசுத்தங்களை  இயற்கையான முறையில் நீக்குகிறது.

தேன் முகத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. இயற்கையான பிரகாசத்தையும் தருகிறது. 

மஞ்சள் முகத்தை பிரகாசமாக்க உதவுகிறது. மேலும் கரும்புள்ளிகளை அகற்றுகிறது. 

ரோஸ் வாட்டர் சருமத்திற்கு குளிர்ச்சியையும் டோனிங் விளைவையும் தருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com