க்ளீன் ஷேவ்வா? நீண்ட தாடியா? உங்களுக்கு எது செட் ஆகும்?

beard style for face shape
clean shave vs beard
Published on

இன்றைய தலைமுறை ஆண்கள் பலரும் 20 வயதைக் கடந்தவுடன் தங்களை அழகுபடுத்த தாடி வளர்க்கத் தொடங்குகின்றனர். ஒரு புறம் இது பேஷனாக தோற்றம் அளித்தாலும், மறுபுறம் க்ளீன் ஷேவ் (Clean shave) என்ற தோற்றமும் பலருக்கு அழகு சேர்க்கிறது. யார் யாருக்கு எது பொருந்தும் என்பதைப் பார்ப்போமா?

ஓவல் முகங்களைக் (Oval face) கொண்ட ஆண்கள் இந்த விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களின் சீரான(Balanced) முக அமைப்பு அவர்களின் தேர்வைச் சுலபமாக்குகிறது. அது முழு தாடியாக இருந்தாலும் அல்லது தாடி இல்லாத க்ளீன் ஷேவ் என எதுவாக இருந்தாலும்; இரு ஸ்டைல்களும் இவர்களுக்குக் கட்சிதமாக அழகு சேர்க்கின்றன.

மறுபுறம், வலுவான தாடைகள் (strong jawlines) கொண்ட சதுர முகம் (square-face men) கொண்ட ஆண்கள் பெரும்பாலும் க்ளீன் ஷேவ் தோற்றத்திலோ அல்லது தாடியை ஓரளவு குறைத்து (Trim) பராமரித்தாலோ அவர்களுக்கு அழகு சேர்க்கும். இந்த ஸ்டைல் அவர்களின் முகத்தில் இருக்கும் எலும்பு அமைப்பைக் கொஞ்சம் தூக்கலாகக் (Highlight) காட்டும்.

வட்ட முகங்களுக்கு (round faces) தாடிகள் வேறொரு உருமாற்றத்தை(Transformation) ஏற்படுத்தும். ஒரு நீண்ட தாடி அல்லது பிரெஞ்சு தாடி (goatee styled beard) அவர்களின் முகத்திற்குக் கூடுதல் நீளத்தைச் சேர்க்கிறது. வான் டைக் Van Dyke) அல்லது boxed beard போன்ற ஸ்டைல்கள் அவர்களின் வட்ட வடிவ முக அமைப்பிற்குக் கூடுதல் அழகு கொடுக்கும்.

செவ்வக (Rectangular face) அல்லது நீள்வட்ட முகங்கள் (oblong faces) கொண்டவர்கள் மிக நீளமான தாடிகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை முக நீளத்தை மிகையாகக் (Extra wide) காட்டும். எனவே, கன்னத்தை மூடும் முழுமையான தாடி அல்லது சுத்தமான ஷேவ்கூட இவர்களின் அழகில் ஒரு சமநிலையைத் தரும்.

குறுகிய (narrow) நெற்றி, பரந்த (wider) தாடைகள் கொண்ட வைர, முக்கோண வடிவ முகங்கள் (Diamond and triangle-shaped faces) - பெரும்பாலும் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட தோற்றம் அல்லது குறைவான தாடி (Trimmed) அவர்களுக்குப் பொருந்தும். இந்த ஸ்டைல்கள் அவர்களின் முகத்தின் கீழ்பகுதியை மென்மையாக்குகின்றன (Soft); இதனால் இவர்களின் தாடை பெரிதாகத் தோற்றம் அளிக்காது.

இதற்கிடையில் அகன்ற நெற்றிகளுடன், குறுகிய (Short) தாடைகள் கொண்ட இதய வடிவ முகங்கள் (heart-shaped faces) அதிகமான தாடியை வைத்துக்கொள்ளலாம்; இது அவர்களின் முகத்தின் கீழ்ப்பாதியைச் சமநிலைப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
Beard Growth Tips: இது தெரிஞ்சா தாடி வளர்ப்பது ரொம்ப ஈசி! 
beard style for face shape

நம் முக அமைப்பை எப்படி கணிக்கலாம்?

ஒரு கண்ணாடி முன் நின்று உங்கள் தலைமுடியை பின்னால் இழுத்துக்கொள்ளுங்கள். முன்பக்கமாக தெரியும் உங்கள் முகத்தைப் புகைப்படமாக எடுங்கள். நெகிழ்வான டேப் (flexible tape) அல்லது ஸ்கேலைப் (Ruler) பயன்படுத்தி உங்கள் நெற்றி, கன்னங்களின் எலும்புகள், தாடையை வைத்து முழு முகத்தின் நீளத்தை அளவிடவும். உடனடியாக நீங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் ஃபேஸ் ஷேப் டிடெக்டர் (Face Shape Detector) போன்ற AIயில் இயங்கும் ஆப்களைப் (Apps) பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com