அழகழகாய் வித்தியாசமான லிப்ஸ்டிக் வகைகள்!

Different types of lipsticks
Lipstick imagesimage credit - pixabay
Published on

மேக்கப் போடத் தெரியாத, விரும்பாத பெண்கள் கூட லிப்ஸ்டிக் போடுவதை  விரும்புவர். அலுவலகமோ, சின்ன விழாக்கள் என நாமே செய்து கொள்ளக்கூடிய எளிய மேக்கப் விஷயம் எனில் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதுதான். அதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மேட், மற்றொன்று கிளாஸ்‌. இதில்தான் பல வகைகள், பிராண்டுகள் உள்ளன.

மேட் லிப்ஸ்டிக் 

என்ன சாப்பிட்டாலும் லிப்ஸ்டிக் அப்படியே இருக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு மேட் லிப்ஸ்டிக்தான் பெஸ்ட். மாடர்ன் லுக், பிரைட் மற்றும் ஃபேஷன் டிரெண்ட் காட்ட மேட் லிப்ஸ்டிக் உதவும்.

ஷியர் அல்லது சாட்டின் லிப்ஸ்டிக் 

இரண்டுமே ஒரே மாதிரியான வெரைட்டிகள்தான். ரெண்டுமே வறண்ட சருமத்துக்கு ஏற்றது. ஆன்லைனில் வாங்குவதை விட நேரில் சென்று பிராண்ட்,கலர் செக் பண்ணி வாங்க சரியாக இருக்கும். சாட்டின் அதீத ஷைனிங் ஆயில் கொண்டது. ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இரவு நேர பார்ட்டிகளுக்கு ஏற்றது இந்த சாட்டின் லிப்ஸ்டிக்.

Lipstick images
Lipstick imagesimage credit - pixabay

கிளாஸ் லிப்ஸ்டிக் 

கிளாஸ் லிப்ஸ்டிக் வகைகள் உதடுகளின் அமைப்பை சற்று பெரிதாக காட்டும். மெல்லிய உதடுகள் கொண்ட பெண்கள் இந்த லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேலும் பார்ட்டிகளுக்கு, ரிசப்ஷன் போன்றவற்றிற்கு போட்டுப்போக ஏற்றது.

கிரீம் லிப்ஸ்டிக் 

அதிக ஷைனிங் கொண்டது வேண்டாம். ஆயிலாக இருக்கக் கூடாது, ஆனாலும் உதடுகள் முழுக்க சரிசமமாக பரவியிருக்கணும் என்று நினைக்கும் பெண்களுக்கு கிரீம் லிப்ஸ்டிக் சரியான தேர்வாக இருக்கும். கிரீம் லிப்ஸ்டிக் இருக்கும் வேக்ஸ் கவர் போலவும் செயல்படும்.

பேர்ல் லிப்ஸ்டிக் 

கிளாஸ் லிப்ஸ்டிக் ஜொலிக்கும். ஆனால் பேர்ல் லிப்ஸ்டிக் வெளிச்சம் பட்டாலே மினுமினுக்கும். வெளிச்சத்தை பிரதிபலிக்கும்.

லிப் இங்க்,லிப் பெயிண்ட் 

கலையாமல் காலை முதல் மாலைவரை இருக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு அப்படியே பெயிண்ட் போல அப்ளை பண்ண ஏற்றது. கலையாமல் போட்டது போலவே இருக்கும். இதை தவிர்த்து லிப் டின்ட், மாய்ஸ்சுரைசர் லிப்ஸ்டிக், கிரேயான் லிப்ஸ்டிக், லிப் ஸ்கெட்ச் என பல வெரைட்டிகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
‘ஹேங் நெயில்ஸ்’ எனப்படும் தொங்கு நகங்கள் ஏன் தோன்றுகின்றன தெரியுமா?
Different types of lipsticks

லிப்ஸ்டிக் போடும் முன் செக் பண்ணி போட, ஒவ்வாமை, கலர் வேறுபாடுகள் போன்றவை தெரியும். லிப்ஸ்டிக் பிரஷ் கொண்டு போட சரியாக இருக்கும். என்ன கலர் லிப்ஸ்டிக்கோ அதே  ஷேடில் தான் லிப் லைனர் போடவேண்டும். சிலர் அடர் நிறத்தில் லிப் லைனர் பயன்படுத்துவர். அவ்வாறு அவுட் லைன் போடும்போது உதட்டை சுற்றி ஸ்கெட்ச் பேனாவில் அவுட் லைன் வரைந்த மாதிரி போடுவது பொருத்தமாக இருக்குமா என பார்த்து போடவேண்டும்.

உதட்டைவிட பெரிதாக லிப்ஸ்டிக் போடக்கூடாது. முடிந்தவரை இதழ்களோடு இருபக்க ஓரங்களிலும் லிப்ஸ்டிக் போடாமல் தவிர்ப்பது நல்லது. அலுவலகம், கல்லூரி போன்ற தினசரி நேரத்தில் நியூட் அல்லது நேச்சுரல் கலரை தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்ளலாம். தொடர்ச்சியான, தரமற்ற லிப்ஸ்டிக் உதடுகளை கருப்பாக மாற்றிவிடும். வெண்ணெய், பாலாடை போன்றவை உதடுகளின் பளபளப்பை தக்க வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com