

தினமும் ஐஸ் வாட்டர் கொண்டு முகம் கழுவுவதால், முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி பிரகாசமடையும். ஐஸ்கட்டியால் மசாஜ் செய்வதால், முகம் புத்துணர்வு பெறும். அவற்றின் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஐஸ் வாட்டரை பயன்படுத்தும் முறை;
ஐஸ் வாட்டரை ஒரு கோப்பையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளாலும், அந்தக் குளிர்ந்த நீரை அள்ளி நிதானமாக முகம் முழுக்க படுமாறு சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ஒரு அகன்ற பாத்திரத்தில், குளிர்ந்த நீரை ஊற்றி, முகத்தை அதில் படுமாறு சில வினாடிகள் வைத்திருக்க வேண்டும்.
பயன்கள்;
முகத்தில் உள்ள அழுக்குகளைக் களைந்து விடும். முகத்தில் இரவு முழுவதும் தேங்கியுள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பிசுக்கை அகற்றி, டல்லான தோற்றத்தை மாற்றி மிகவும் பிரசாகமாக மாற்றுகிறது.
முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது இளமையாக தோற்றமளிக்க செய்யும். முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவுவது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை கணிசமாக அகற்றும். இது முக சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு சோர்வையும் நீக்குகிறது. குளிர்ந்த நீர் ஒரு நொடியில் அதிக ஆற்றலை ஏற்படுத்தும். சருமமும் இரத்த ஓட்டம் அதிகரித்து, பளபளப்பான தோற்றம் கிடைக்கிறது.
ஐஸ் தண்ணீரில் முகத்தை மூழ்க வைப்பதால் நரம்பு மண்டலத்தை தூண்டி மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்களை குறைக்கிறது. மனதை ரிலாக்ஸ் செய்து அமைதியாக வைக்கிறது.
ஐஸ் கட்டியை பயன்படுத்தும் முறை;
ஒரு ஐஸ் கட்டியை வெள்ளை நிற காட்டன் துணியில் சுற்றி, முகம் முழுவதும் கீழிருந்து மேலாக மசாஜ் செய்ய வேண்டும். முகத்திற்கு ஆக்ஸிஜன் சென்று தோலில் உள்ள செல்களுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது. அதனால் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.
சிலருக்கு, சரியாக தூக்கம் இல்லாததால், கண்ணுக்கு கீழே வீங்கி, ஐ பேக்ஸ் தோன்றும். ஐஸ் கட்டியை கண்ணுக்கு கீழ் உள்ள பகுதியில் மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம், ஐ பேக்ஸ் மறைந்து விடும்.
சிலருக்கு முகத்தில் அங்கங்கே சிறு துளைகள் இருக்கும். ஐஸ்கட்டி மசாஜ் செய்வதன் மூலம் துளைகளின் அளவுகளை குறைக்கிறது. அதனால் முகம் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும். முகத்தில் உள்ள நிணநீர் அளவுகளை சரியாக்குகிறது. மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குகிறது
முகத்தை கழுவிய பிறகு ஒரு மென்மையான துணியால் முகத்தை துடைத்துக் கொள்ளவும்.