
இன்றைய கல்லூரி பெண்கள் மத்தியில் தம்மை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் இருக்கும் அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. தோழிகளின் பரிந்துரையாலும், இன்ஸ்டா ரீல்ஸை பார்த்தும் ஏதேதோ புதிய ப்ராடெக்கடுகள் மற்றும் பியூட்டி கேர் முறைகளை பின்பற்றுகின்றனர். இது சில நேரம் சருமம் மற்றைவைகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கல்லூரி மாணவிகள் பளிச் தோற்றம் தர உதவும் வழிகள் என்ன என்று பார்ப்போம்.
சுத்தப்படுத்துதல்
உங்கள் சரும வகைக்கு ஏற்ற மென்மையான கிளென்ஸருடன் உங்கள் நாளை தொடங்குங்கள். இரவில் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்கு அல்லது அசுத்தங்களை அகற்ற இது உதவுகிறது.
டோனிங்
உங்கள் சருமத்தின் பி எச் அளவை சமநிலைப்படுத்த டாலரின் கட்டாயம் பயன்படுத்தவும் எளிதாக கிடைக்கும் ரோஸ் வாட்டர் கூட டோனராக பயன்படுத்தலாம்.
ஈரப்பதமாக்குதல்
சருமத்தை அதிக எண்ணெய் வடியும் தோற்றத்துக்கு மாற்றாமல் ஈரப்பதமாக்கும் மாய்சரைசரைப் பயன்படுத்தவும். தென்னிந்திய வானிலைக்கு ஏற்ற கிரீஸ் இல்லாத ஃபார்முலா சருமத்தின் இளமையைத்தக்க வைக்கும். சருமத்தில் புத்துணர்வு தோற்றம் தரும்.
சூரிய பாதுகாப்பு
கடும் வெயில் காலங்களில் குறைந்தபட்சம் SPF 30 கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இது சருமத்துக்குத் தீங்கு விளைவிக்கும் புறஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும்.
இரண்டு சரும செல்களை வளர்க்க ஆரத்துக்கு ஒரு முறை உங்கள் சருமத்தை ஸ்கிரப் செய்யவும். பாலில் மஞ்சள் தூள் கலந்த கடலை மாவு போன்ற இயற்கையான ஸ்கரப்பர்களை பயன்படுத்தி செய்யலாம்
உங்கள் சரும வாழ்க்கைக்கு ஏற்ற ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள். எண்ணை சருமத்திற்கு முல்தானி மிட்டி மாஸ்க் வறண்ட சருமத்திற்கு தேன் + தயிர் மாஸ்க் ஈரப்பதம் அளிக்கும்.
கூந்தல் பராமரிப்பு
மிதமான ஷாம்பு போட்டு தலைமுடியை தவறாமல் கழுவவும். ஈரப்பதமான சூழ்நிலையில் இரண்டு அல்லது மூணு நாட்களுக்கு ஒருமுறை உங்கள் உச்சந்தலை சுத்தமாக வைத்திருக்கவும். தலைக்கு குளித்த பிறகு பொருத்தமான கண்டிஷனரை பயன்படுத்தவும்.
வாரம் ஒருமுறை உங்கள் தலை முடிக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி ஊறவைத்து கூந்தலின் வேர்களை வலுப்படுத்தி பிரகாசமாக வைத்திருக்கும். தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி உச்சந்தலையில் மசாஜ் செய்து தடவும் .இது கூந்தல் வளர நல்ல பலன் அளிக்கும்.
வாரத்திற்கு ஒருமுறை ஹேர் மாஸ் போடுங்கள். தயிர், தேன் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவை பயன்படுத்தி வீட்டில் ஊட்டமளிக்கும் ஹேர் மாஸ்க்கை உருவாக்கி தலையில் தேய்த்து குளித்து வந்தால் கூந்தல் வலுவாகும்.
சுய பராமரிப்பு
தினமும் ஒருமுறையாவது உடம்புக்கு குளிக்கவும். வெப்பமான கால நிலையை கருத்தில் கொண்டு லேசான சோப்பு, பாடி வாஷ் பயன்படுத்தி வியர்வை ஏற்படுத்தும் பகுதிகளில் கவனம் செலுத்தி குளிக்கவும். இதனால் எப்போதும் உங்கள் உடல் பிரஷ் ஆக இருப்பதை உணரலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கி நாக்கில் படியும் அழுக்கை அகற்றி மௌத்வாஷ் பயன்படுத்தி உங்கள் சுவாசத்தை புத்துணர்வுடன் வைத்திருங்கள்
நகங்களை சுத்தமாகவும் வெட்டப்பட்டதாகவும், வைத்திருங்கள் . நகம்உடைவதை தடுக்க அவற்றை நன்றாக பராமரித்து ஆரோக்கியமாகவும், அழகாகவும் ,வைத்திருக்க உதவும் நெயில் பாலீசை பயன்படுத்துங்கள்.
ஒப்பனை அடிப்படைகள்
தினசரி கல்லூரி தோற்றத்திற்கு உங்கள் மேக்கப் குறைந்தபட்சமாக போடுங்கள். பிபி கிரீம் சல்லது லைட் பவுண்டேஷன், காஜல் மஸ்காரா, டின்டேட் லிப்பாம் ஆகியவை உங்கள் இயற்கை அழகை அதிகரிக்க போதுமானது.
முக்கிய தினங்கள் மற்றும் விழா நிகழ்வுகளுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக மேக்கப் பை பயன்படுத்தலாம். உங்கள் சரும நிறத்துடன் பொருந்தக்கூடிய ஃபவுண்டேஷன், நுட்பமான ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா தடித்த உதட்டுச்சாயம் உங்கள் தோற்றத்தை ஸ்பெஷலாக் காட்டும்.
படுக்கச் செல்வதற்கு முன் எப்போதும் மேக்கப்பை அகற்றவும். மென்மையான மேக்கப் ரிமூவர் அல்லது மைக்கேல் தண்ணீரை பயன்படுத்தி மேக்கப் பை கலைத்துவிட்டு படுக்கச்செல்லவும்.
ஆடை மற்றும் அணிகலன்கள்
உங்களுக்கு வசதியான உங்கள் தனிப்பட்ட பாணியை பிரதிபலிக்கும் ஆடைகளை தேர்வு செய்யவும். காட்டன் குந்திகள், சல்வார் கம்மீஸ் மற்றும் சிக் டாப்ஸுடன் கூடிய ஜீன்ஸ் ஆகியவை நல்ல அழகான தோற்றமும் லுக்கை தரும்.
காலுக்கு தரமான காலணிகைளை தேர்வு செய்து போடுங்கள். வசதியான செருப்புகள் ஃபிளாட் அல்லது சாதாரண பாட்டம் கொண்ட காலணிகளை தினசரி அணிவதற்கு ஏற்றவை .அதே நேரத்தில் ஒரு ஜோடி ஹைஹீல்ஸ் இருந்தால் சிறப்பான விழாக்களுக்கு வெளியிடங்களுக்கும் உங்களுக்கு தகுந்த மாதிரி பயன்படுத்தலாம்.
குறைந்தபட்சம் ஒரு ஜோடி காதணிகள் ஒரு எளிமையான வளையல் அல்லது கைக்கடிகாரம் ஒரு மென்மையான சங்கிலி ஆகியவையே உங்கள் தோற்றத்தை நேர்த்தியாகக் காட்டும்.