நீங்க அழகா இருக்கோணும்னா...!

Beauty Tips
Beauty Tips
Published on

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல்வேறு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் முகம் மற்றும் சருமத்தின் அழகினை தொடர்ந்து  பராமரிக்க முடியும். அவற்றைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

அழகினை மேம்படுத்துவதில் Cleansing, Toning, Moisturizing இந்த மூன்று படிகள் தான் மிகவும் முக்கியமானவை. 

இதில் Cleansing என்பது முகத்தை சுத்தமாக்குவது. Toning என்பது சருமத்தில் உள்ள துவாரத்தை மூடி மறைப்பது. Moisturizing சருமம் வறண்டு போகாமல் தடுப்பது.

  • அன்றாட பழக்கவழக்கங்களில் மோர் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற இறந்த செல்களை நீக்க முடியும் - Cleansing

  • ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் உள்ள துவாரங்களை அடைத்து பாதுகாக்க முடியும் - Toning

  • தேங்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் தோல் வறண்டு போகாமல் காக்க முடியும் - Moisturizing

  • கணினி, மொபைல் போன்றவற்றின் காரணமாக தொடர்ந்து திரைகளை பார்ப்பதால் கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்கள் மற்றும் கருவளையங்களை தடுப்பதற்கு வெள்ளரிக்காயை பயன்படுத்தலாம்.

  • அதிகப்படியான வெயில் காலங்களில் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன்களை பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான நீரிழப்பை தடுக்க உதவும். சன் ஸ்கிரீன்கள் பவுண்டேஷன் கலந்தாக இருப்பது மிகவும் நல்லது. கோலஜன், புரதம் மற்றும் வைட்டமின் அதிகமாக இருக்கக்கூடிய சிலவகை நைட் கிரீம்களையும் மருத்துவரின் பரிந்துரையின் படி பயன்படுத்துவது சருமம்  மூப்படையாமல் தடுக்க உதவும்.

  • இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு நன்கு எண்ணெய் வைத்து குளிப்பது, தலையில் அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் தொடர்ந்து கூந்தல் அழகினை பராமரித்து வர முடியும். மேலும் பயன்படுத்தக்கூடிய ஷாம்பூ மற்றும் சீயக்காய் வகைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்காமல் ஒரே வகையிலானதை  தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது.

இதையும் படியுங்கள்:
முயல் ரத்தத்தில் ஹேர் ஆயில்… உண்மை இதோ! 
Beauty Tips
  • முகப்பொலிவு மற்றும் சருமத்தினை பராமரிப்பதற்கு வீடுகளில் உள்ள இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் நீண்ட ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு எதிர் விளைவுகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.

  • சருமத்தை தொடர்ந்து ஈரப்பதத்தோடு வைத்துக் கொள்வதற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி வரலாம்.

  • கூந்தலை தொடர்ந்து பராமரிக்க ஆயில் மசாஜ் செய்யலாம்.

  • முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு மஞ்சளை பயன்படுத்தலாம். முகச்சுருக்கங்களை நீக்குவதற்கும் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதற்கும் கடலை மாவினை பயன்படுத்தலாம்.

  • கடலை மாவுடன் வாழைப்பழம் மற்றும் தேன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் வறண்ட சருமத்தை நீக்க முடியும்.

  • முகத்தில் அலர்ஜி, முகப்பரு போன்றவை ஏற்படும் போது தக்காளியை நன்கு தடவி மசாஜ் செய்யலாம்.

  • முகம் புத்துணர்ச்சியாக இருக்க பப்பாளி மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து அவ்வப்போது முகத்தில் பூசி குளிர்ந்த நீரால் சுத்தப்படுத்தலாம்.

  • அன்றாட உணவில் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வது முகம் மற்றும் உடல் அழகினை தொடர்ந்து பராமரித்து வர உதவும். மேலும் காரமான உணவுகளை குறைத்து அதிகமான நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், அதிக புரதச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்  உடலின் அழகினை மேம்படுத்த உதவும்.

இதையும் படியுங்கள்:
பளபளப்பான முக அழகிற்கு பழ ஃபேசியல்!
Beauty Tips
  • சருமம் மற்றும் முகத்தின் அழகினை பராமரிப்பதில் தூக்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு. முறையான உணவு பழக்கங்களும் உடலுக்கு போதுமான தூக்கமும்  அழகு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இரவில் நெடும் நேரம் கண்விழிப்பது கண்கள் உலர்ந்து போவதற்கும், கண்களை சுற்றி கருவளையம் வருவதற்கும் ஒரு முக்கிய காரணம். வீட்டில் இருக்கும் போது முகம் மற்றும் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து கொள்வதும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும் முக்கிய வழிமுறைகளாகும்.

பொதுவாக அழகு சார்ந்த விஷயங்களில் இயற்கை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் எதிர் விளைவுகள் இல்லாத நீண்ட கால ஆரோக்கியத்தை தொடர்ந்து பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com