இவற்றை முயற்சி செய்தால் ஆண்களும் அழகாகலாமே! 

Beauty Tips for Men
Beauty Tips for Men

அழகு மற்றும் மேக்கப் என வரும்போது, அது பெண்களுக்கு மட்டும்தான் என்பதல்ல, ஆண்களும் சிறந்த தோற்றத்தைப் பெறவும், உணரவும் தகுதியானவர்களே. இந்தப் பதிவில் ஆண்கள் எதுபோன்ற விஷயங்களை முயற்சித்து தங்களின் அழகை இயற்கையாக அதிகரிக்கலாம் என்பது பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

சருமப் பராமரிப்பு: ஒரு நல்ல சருமப் பராமரிப்பு என்பது, ஆண்கள் அழகாக தெரிவதற்கு மிகவும் முக்கியம். சருமத்தில் இருக்கும் அழுக்குகள், எண்ணெய் போன்றவற்றை நீக்குவதற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை க்ளென்ஸரைப் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யுங்கள். உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்த மாய்ச்சரைசர் பயன்படுத்தவும். தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க, சன் ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதிர்கள்.  

Grooming: நீங்கள் தாடி வைத்திருந்தாலும் சரி, அல்லது கிளீன்ஷீவ் தோற்றத்தை விரும்பினாலும் சரி, அதை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். எனவே, குறைந்தது 15 நாட்களுக்கு ஒரு முறை, முகத்தில் உள்ள முடியை முறையாக ஒதுக்குங்கள். அதேபோல மாதத்திற்கு ஒருமுறை முடி வெட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களது தோற்றத்தை பிறருக்கு சிறப்பாக எடுத்துக்காட்டும். 

தலைமுடியை கவனித்துக் கொள்ளுங்கள்: ஆரோக்கியமான தலைமுடி உங்களது ஒட்டுமொத்த தோற்றத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் முடிவகைக்கு ஏற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனரைக் கண்டறிந்து பயன்படுத்தவும். தலைமுடி உதிராமல் இருக்க அதை முறையாக பராமரிக்கவும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். குறிப்பாக புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் முக வடிவத்திற்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். 

உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்: பொதுவாகவே ஆண்கள் ஃபிட்டாக இருந்தாலே அழகாக இருப்பார்கள். எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, முறையாக உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் அழகை முறையாக பராமரிக்கவும். இதன் மூலமாக எல்லா ஆண்களும் வசீகரிக்கும் தோற்றத்தை பெறலாம். உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் மேம்பட்டு சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும். எனவே உங்கள் உடலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 

கை மற்றும் கால்களில் கவனம் தேவை: ஆண்கள் அதிகமாக வெளியே செல்வதால், கை மற்றும் கால்களில் அதிக அழுக்கு படிவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கை மற்றும் கால்களை முறையாக பராமரிக்கவும். நகங்களை வெட்டுதல், கை கால்களை கழுவுதல் போன்றவற்றை கடைபிடிக்கவும். கை கால்களை முறையாக பராமரிப்பதாலும் ஆண்கள் தங்களின் தோற்றத்தை சிறப்பாக காண்பிக்க முடியும். 

இதையும் படியுங்கள்:
ஆண் குழந்தைகள் அம்மாவிடம் எதிர்ப்பார்க்கும் ஐந்து குணங்கள் எவை தெரியுமா?
Beauty Tips for Men

இவற்றை முறையாகப் பின்பற்றி வந்தாலே, ஆண்களும் பிறருக்கு அழகாகத் தெரியலாம். எனவே இந்த விஷயங்களை நினைவில் கொண்டு, உங்களை நீங்கள் அழகுப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். உங்களுடைய தோற்றம் அழகாக இருந்தால், நிச்சயம் உங்களை அனைவருக்குமே பிடிக்கும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com