

மழைக்காலத்தில் வெளியில், அலுவலகம் செல்லும் பெண்கள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். சருமம் ஈரக்காற்றில் உலரும். தொடர்ச்சியாக படுகின்ற ஈரக்காற்றால் சருமம் பாதுகாப்பாக இருக்க எளிய முறையில் செய்யும் வழிகள்:
மழைக்காலத்தில் ஊஞ்சல் ஈரமாக இருந்தால் உடல் நலப் பிரச்னைகள் ஏற்படும். எனவே மழைக்காலத்தில் சருமம் மட்டும் ஈரம் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஈரமான கூந்தலை ஹேர் ட்ரையர் பயன்படுத்தி காயவிட்டும் அல்லது வெந்நீரில் கூந்தலை காட்டி ஆவி பிடிக்கலாம்.
மழைக்காலத்தில் வெந்நீரில் குளித்தால் சருமம் நிறம் மாறாமல் இருக்கும். குளிக்கும் நீரில் அதில் ஒரு கைப்பிடி வேப்பிலை போட்டு பின்னர் குளித்தால் சருமம் வறட்சி அடையாது. குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தடவி குளித்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
மழைக்காலத்தில் பாலும், மஞ்சளும் கலந்து உடலில் பூசிக்கொண்டு சில நிமிடங்கள் ஊறவைத்து பின் குளித்தால் மழைக்கால சரும தொற்றுகளை தவிர்க்கலாம்.
மழைக்காலத்தில் ஈரமான துணிகளின் காரணமாக சரும எரிச்சல், பூஞ்சை பாதிப்பு போன்றவை வர வாய்ப்பு உண்டு எனவே ஈரத் துணியை கழட்டியவுடன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவி பின்னர் குளிக்கலாம்.
மழைக்காலத்தில் கண்மையால் கண்களை அழகுப்படுத்துவதை தவிருங்கள். ஏனென்றால் இது அழிந்து பரவி உங்கள் கண்களை அசிங்கமாக்கிவிடும். அதற்கு பதிலாக ஜெல் டைப் ஐ லைனர் பயன்படுத்தலாம். இது நீண்ட நேரம் அழியாமல் இருக்கும்.
மழை நாட்களில் அதிக வேர்க்காது என்றாலும், உடல் துர்நாற்றம் உடனே பரவும் எனவே டியோடரண்ட் பயன்படுத்துவது நல்லது.
மழைக்காலத்தில் வெளியே செல்லும்போது அடர்ந்த வண்ண உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்துங்கள். திடீரென மழை வந்து சேறும் சகதியும் ஆனாலும், ஆடை அழுக்காகி உங்களை கைவிடாமல் இருக்கும். சாலைகளில் சகதி நிறையவே நிரம்பி வழியும் வெள்ளை நிற உடையை தவிருங்கள். இக்காலத்தில் ஹை ஹீல்ஸ் போட்டு கவனமாக நடக்க வேண்டும்.
மழை காலத்தில் நனைந்தால் முகத்தில் படிந்துள்ள தண்ணீரை சிறு கர்ச்சிப்பால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுத்தித் துடைத்தால் அந்தப் பகுதியில் மட்டும் மேக்கப் கலைந்து போய்விடும்.
மழைக்காலத்தில் குறைவாக அமைக்கப் போட்டால்தான் அழகாக இருக்கும். குறிப்பாக மேக்கப் போட்டிருப்பதே தெரியக் கூடாது.
அதே சமயம் மழையில் நனைந்தாலும் மேக்கப் கரைந்து ஓடக்கூடாது. அதற்காகவே வந்துள்ளது வாட்டர் ஃப்ரூப் மேக்கப் அயிட்டங்கள் இவை மழை நனைந்தாலும் ஒன்றும் ஆகாது.
இதைப்போலவே ஆயில் மேக்கப்பும் உள்ளது. தண்ணீர் எண்ணெய் மேல் ஒட்டாது என்பதால் இந்த மேக்கப்பையும் பயன்படுத்தலாம்.