
முன்பெல்லாம் வீட்டு பெரியவர்கள் உபயோகித்த முறையில்தான் முக, சிகை அலங்காரங்கள் செய்து கொள்வோம். தற்போது சமூக வலைதளங்களில் மேக்கப் சார்ந்து பல தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
நாமே தயாரித்த, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அழகுபடுத்தி கொண்டோம். இவை பெரிய பிரச்னைகளை தந்ததில்லை. அவரவர் சொந்த அனுபவம், படித்ததில் இருந்து எடுத்தது என் அவரவர் சொன்ன அழகு சார்ந்த விஷயங்களை செய்யும்போது பெரும்பாலும் பிரச்னைகளைதான் கொடுக்கும்.
உதாரணமாக சின்ன வெங்காயத்தை பயன்படுத்தினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று பலர் கூறுவதுண்டு. இது உண்மையில்லை. சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர், தலைமுடி உதிர்வுக்குதான் காரணமாகிவிடும். வெங்காயத்தை பச்சையாக அப்படியே அரைத்து தலையில் தேய்க்கும்போது இருக்கும் முடியும் மெலிதாகி, அறுந்து உதிர்தல் தொடங்கிவிடும்.
சிலருக்கு கை கொடுக்கும் இந்த சின்ன வெங்காய சிகிச்சை எல்லோருக்கும் பயன்தராது. அதேபோல முகத்திலுள்ள கரும்புள்ளிகள், உதட்டின் கருமை போக்க, தக்காளி அல்லது எலுமிச்சை சாற்றுடன் உப்பு பயன்படுத்துவார்கள். தக்காளி, எலுமிச்சை, உப்பு, சர்க்கரை போன்றவற்றை அழகுக்காக நேரடியாக பயன்படுத்தக் கூடாது. இதிலுள்ள அமிலம், முகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதனுடன் உப்பை சேர்த்து பயன்படுத்தும்போது எதிர்வினையை கொடுத்துவிடும். இதனால் பலருக்கும் சருமத்தில் சுருக்கம், முகப் பருக்கள் வரக்கூடும். மிகவும் மென்மையான உதட்டில் எலுமிச்சை, உப்பு, தக்காளி போன்றவற்றை தடவிவர உதடு புண்ணாக வாய்ப்புள்ளது.
உப்பு கரைசலை முகத்தில் தடவினால் சருமத்தில் சுருக்கம் ஏற்படும். சருமம் உரிந்து வரும். முகப்பரு இருப்பவர்கள் சர்க்கரையை பயன்படுத்தும்போது முகத்தில் தழும்பு அல்லது ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படலாம். அதேபோல் காபி தூள் பயன்படுத்துவது சருமத்தில் சிராய்ப்பு, சொரசொரப்பை ஏற்படுத்தும்.
வைட்டமின் ஈ ஆயில் என்பது மருத்துவ ஆலோசனைபடி உள்ளுக்கு சாப்பிடுவது. இதை ம தூள் அல்லது எ சாற்றுடன் சேர்த்து தடவ நிச்சயம் சரும பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். அதேபோல் ரோஸ் வாட்டர் தரமானதா என செக் பண்ணி வாங்க வேண்டும். தரமற்றதை உபயோகிக்க முகத்தில் கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவை ஏற்படலாம்.
இரவில் பேஸ்ஃபேக் போட்டு விட்டு அப்படியே தூங்குவது, நீண்ட நேரம் ஹேர் பேக் கை வைத்திருப்பது போன்றவை தவிர்க்கபட வேண்டும்.10-15நிமிடங்களில் ஃபேஸ் பேக்கை நீக்கி விட வேண்டும்.
அழகை மேம்படுத்திக் கொள்கிறேன் என அறியாமையால் செய்யும் அழகு குறிப்புக்கள் ஆபத்தை, அழகை கெடுத்துவிடும். இதற்கு ஒரே தீர்வு துறை சார்ந்த அழகு நிபுணர்கள், மருத்துவர்கள் ஆலோசனைபடி செய்ய பிரச்னைகளிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.