உங்கள் சமையலறையிலேயே ஒளிந்திருக்கும் அழகுப் பொக்கிஷங்கள்!

Beauty treasures in kitchen
Beauty treasures in kitchen
Updated on

பெண்கள் தங்கள் உடல் சோர்வடையாமல் இருக்க இனிப்புடைய பழங்கள் தேன் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

தீண்டாத அரிசியையும் தோல் உரிக்காத உருளைக் கிழங்கையும் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.

தோல்களில் சுருக்கம் விழாமல் வலிமையுடன் மொழு மொழு என்று பார்ப்பதற்கு அழகாக இருக்க தினந்தோறும் எதாவது ஒரு பழச்சாறை ஒரு டம்ளர் அருந்தவேண்டும்.

கம்பீரமான தோற்றம் உண்டாக காரட் தக்காளி வெண்டைக்காய் உண்ணவேண்டும்.

விரல்கள் நீண்டு அழகுடன் வளர வெண்டைக்காயின் பிஞ்சுகளை பச்சையாக உண்ணவேண்டும். உடல் தங்கம் போல மின்ன பொன்னாங்கண்ணி கீரையை சமைத்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.

முதுகில் கூனல் விழாமல் இருக்க மீன் எண்ணெய் தினசரி இரண்டு ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

கீரை காய்கறிகளையும் கொய்யாப்பழம் மல்லித்தழை முருங்கைக்கீரை பழங்கள் பால், மீன் காய்கறி சூப் முட்டை கறி சூப் முளைகட்டிய பயிறு வகைகள் அனைத்தும் பெண்களுக்கு தலைமுடி நன்கு வளர உதவுகிறது.

பசும் பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊற போட்டு காலையில் அதை மையாக அரைத்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் சிவப்பழகுடன் மின்னும் ஃபேர் அண்ட் லவ்லியே தேவையில்லை.

முகத்தை நிரந்தரமாக அழகுப்படுத்த வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள் கொய்யா நெல்லி மாதுளை அத்தி சாத்துக்குடி போன்ற பழ வகைகளை உட்கொள்ள வேண்டும்.

அதிகரிக்கும் மனஅழுத்தம் முகப்பொலிவை பெரும் அளவு பாதிக்கும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும் அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தியாகும்.

இஞ்சியின் தோலை சீவி எடுத்துவிட்டு சிறு துண்டு துண்டுகளாக அறிந்து ஒரு பாட்டிலில் போட்டு அதை மூழ்கும் வரை தேன் ஊற்றி ஊறவைக்க வேண்டும் நன்றாக ஊறிய பின் தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒவ்வொரு துண்டாக சாப்பிட்டு வந்தால் உடம்பு மினுமினுப்பாக ஆகும்.

ஒரு பிடி கொத்துக்கடலையை முந்தின இரவே ஊறவைத்து அதில் சீமை அத்திப்பழம் இரண்டை நறுக்கி போட்டு ஊறவைக்க வேண்டும் காலையில் வேகவைத்து வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் அழகு கூடும்.

இதையும் படியுங்கள்:
சன்ஸ்கிரீன் லோஷன் - ஆடம்பரமல்ல, அவசியம்! ஏன் இவ்வளவு டிமாண்ட்?
Beauty treasures in kitchen

தினசரி உணவில் கீரை வகைகளில் ஒன்றுடன் கேரட் கோஸ் முள்ளங்கி வெள்ளரிக்காய் தக்காளி சாலட் மற்றும் பழங்கள் இவற்றுடன் ஒரு நாளைக்கு கொதித்து ஆறிய தண்ணீர் எட்டு டம்ளர் முதல் பத்து டம்ளர் வரை குடித்து பழகிக்கொள்ள வேண்டும்.

கண்களைச் சுற்றி வரும் கருவளையத்தை தவிர்க்க கேரட் பீட்ரூட் ஜூஸ் பப்பாளி மாம்பழம் போன்றவற்றை உணவில் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும் இரும்பு சத்துள்ள உணவுகள் அதிகம் உண்ணவேண்டும்.

அதிகாலை சூரிய வெளிச்சத்தை பார்ப்பது மிக அவசியம் அதிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி கண்ணுக்கு நல்லது.

சர்க்கரை வள்ளி கிழங்கை குளிர்ச்சியான இடத்தில் வைத்திருந்தால் அதிலுள்ள வைட்டமின் ஏ கெடாமல் இருக்கும் இந்த வைட்டமின் ஏ கண்களுக்கும் கண்களை சுற்றியுள்ள நரம்புகளுக்கும் நல்ல பலத்தை தரும்.

கீரைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் விரைவில் நரை வராது விரைவில் கண்பார்வை குறையாது விரைவில் சருமத்தில் சுருக்கம் ஏற்படாது ஏதாவது ஒரு கீரையை தினமும் உணவில் சேர்த்து வரவேண்டும்.

தினமும் ஏதாவது ஒரு காய்கறி சூப் சாப்பிட்டால் உடல் பலம் பெறும் தோல்கள் உலராது சுறுசுறுப்பை தரும் அன்றாட வேலைகளை சூப்பராக செய்யலாம்.

logo
Kalki Online
kalkionline.com