கால் பாதங்களை அழகாக்கும் Fish Pedicure

Fish Pedicure
Fish Pedicure
Published on

முக பராமரிப்புக்கு  தருகின்ற முக்கியத்துவத்தை,  கால் பாதங்களின்  பராமரிப்புக்கும் தர ஆரம்பித்துவிட்டோம்.  பல அழகு நிலையங்கள் கால் மற்றும் பாத பராமரிப்புக்கென்று பல்வேறு சேவைகளை பிரத்தேயமாக வழங்கியும் வருகின்றன. இதைத் தாண்டி, Fish Pedicure மூலம் கால்களை பராமரிப்பதில் தற்போது பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த Fish Pedicure என்றால் என்ன? அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

Fish Pedicure முறை முதன்முதலில் துருக்கியில் அறிமுகப்படுத்தப்பட்டது.  தற்போது, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த முறை பிரபலமாகி உள்ளது. கால்களை மீன் நீந்துகின்ற தண்ணீர் தொட்டியினுள் வைத்ததும் , அந்த தொட்டியில் உள்ள மீன்கள் கால்களை கடிப்பது போன்ற வீடியோக்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி பார்த்திருப்போம். அந்த மீன்கள்  கால்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்களை கடித்து உண்ணுகின்றன. இதற்குப் பெயர் தான் Fish Pedicure. இதை மீன் ஸ்பா என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் இந்த Fish Pedicure முறைக்கு கர்ரா ரூபா என்ற மீன்களைப் பயன்படுத்துகின்றனர்.  இவை கால்களை சுத்தப்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக வளர்க்கப்படும் மீன்களாகும்.   15 முதல் 30 நிமிடங்கள் வரை இந்த Fish Pedicure முறையை மேற்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
இளமை காக்கும் இயற்கை அமுதம் இதுதாங்க!
Fish Pedicure

Fish Pedicure-யின் நன்மைகள்:

  • Fish Pedicure முறை ஒரு அழகுக்கான சிகிச்சை முறையாக மட்டுமில்லாமல், நமது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தருவதாக அமைகிறது.

  • பாத வெடிப்பு, அலர்ஜி, பாத வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும், அதனை  சரி செய்யவும் உதவுகிறது.

  • பாதங்களில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் அழுக்குகள் இந்த மீன்களின் பிராதான உணவாக உள்ளது. இதன் மூலம் புதிய செல்களை உற்பத்தி செய்யவும், பாதங்களை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற வழிவகுக்கிறது.

  • இந்த மீன்கள் பாதங்களுக்கு அழுத்தத்தை கொடுத்து மசாஜ் செய்கிறது. மேலும், இவை சொரியாசிஸ் மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற நோய்களில் இருந்து பாதங்களை பாதுகாப்பதாக குறிப்பிடப்படுகிறது. இதனால், இந்த கர்ரா ரூபா மீன்கள் ‘மீன் மருத்துவர்’ (Fish Doctor) என்றும் அழைக்கப்படுகின்றன.

  • Fish Pedicure முறை வறண்ட சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவிபுரிகிறது.

  • இந்த மீன்கள் நம் பாதங்களை கடிக்கும்போது, அது வலிக்காமல் ஒருவித கூச்சத்தை ஏற்படுத்தும். அப்போது, நமது உடலில் மகிழ்ச்சி ஹார்மோன் தூண்டப்பட்டு நம் மனதுக்கு அமைதி கிடைக்க வழிவகுப்பதாகச் சொல்லப்படுகிறது.

    இந்த முறையில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் இதில்  உள்ளன.

Fish Pedicure- க்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் அடிக்கடி மாற்றப்படுகிறதா எனக் கவனிக்க வேண்டும். இதற்கு உபயோகப்படுத்தும் தொட்டிகள் சுத்தமானதாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஒருவருக்கு பயன்படுத்திய மீன்களை மற்றொருவருக்கு Pedicure செய்ய பயன்படுத்தும்போது, சில சமயங்களில் அது நோய்த்தொற்று ஏற்பட வழிவகுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள், சருமத் தொற்று உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகள் Fish Pedicure செய்வதை தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com