உங்க வீட்டில் துளசி இருக்கா? முக அழகை கூட்டும் துளசி பேஸ் பேக் செய்யலாம் வாங்க!

துளசி பேஸ்பேக்
துளசி பேஸ்பேக்

பொதுவாகவே துளசி சாப்பிட்டால் ஒரு ஜில் என்ற உணர்ச்சியை தரும். அது நம் உடலில் உள்ள சலியை உடனடியாக சரிப்படுத்தும். துளசிக்கும் ஆன்மீகத்திற்கு நிறையவே தொடர்பு உண்டு. அதனால் தான் துளசி இலையை சாமிக்கு படைப்பார்கள். மேலும் துளசி மாடம் வைத்து பூஜிப்பார்கள். இப்படி ஆன்மீக ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துளசியை பலர் உபயோகிப்பதால் அதை யாரும் அழகுக்காக பயன்படுத்துவதில்லை.

துளசி முக அழகை அதிகப்படுத்த கூடிய ஒரு அரு மருந்தாகும். இதை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் ஜொலி ஜொலிக்கும். இந்த துளசி பேஸ் பேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக் கொண்டு முகத்தைக் கழுவவும். தினமும் இது போல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறைந்து இளமை அதிகரிக்கும்.

துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சருமப் பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பசை போல அரைக்கவும். அதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், அவற்றால் உண்டாகும் தழும்புகள் நீங்கும்.

ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை பசை போல அரைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.

சிறிதளவு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அது நன்றாகக் கொதித்த பின்பு ஆறவைக்கவும். அந்த தண்ணீருடன் சிறிதளவு சந்தனம் சேர்த்து பேஸ்பேக் தயாரிக்கவும். அதை முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பின்பு தண்ணீரில் கழுவவும். அவ்வப்போது இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com