Flaxseed Gel: இதை முகத்தில் தடவுவதால் இவ்வளவு நன்மைகளா?

Flaxseed Gel
Benefits of Using Flaxseed Gel for Face

இயற்கையான பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தினாலே அது பல வகைகளில் நன்மை புரியும். அந்த வகையில் ஆளிவிதை ஜெல் ஒன்றும் விதிவிலக்கல்ல. ஆளிச் செடிகளிலிருந்து பெறப்படும் ஆளி விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. அதன் காரணமாகவே சருமப் பராமரிப்பில் இதைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பதிவில் ஆளிவிதை ஜெல்லை முகத்திற்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

ஆளி விதை ஜெல் ஒரு சக்தி வாய்ந்த மாய்ஸ்ரைசராகும் இது சருமத்தை ஆழமாக ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் இயற்கையான ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. ஆளி விதை ஜெல்லை வழக்கமாக பயன்படுத்தி வந்தால், உங்களது சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் நன்கு நீரேற்றத்துடனும் இருக்கும். 

ஆளி விதை ஜெல் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது எரிச்சல் மற்றும் வீக்கமடைந்த சருமத்தை விரைவில் சரி செய்ய உதவும். முகப்பரு, எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஆளி விதை ஜெல்லை பயன்படுத்தி விரைவில் குணமடையலாம். மேலும் அதில் காணப்படும் ஆன்ட்டிஆக்சிடென்ட் பண்புகள் விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் முகத்தில் உள்ள கோடுகள் சுருக்கங்கள் மறைய வழிவகுக்கிறது. 

ஆளி விதை ஜெல்லின் சளி போன்ற அமைப்பு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது மிகவும் கொழகொழப்பான தன்மையைக் கொண்டிருப்பதால், எல்லாவிதமான சருமம் கொண்ட நபர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் உங்களது சருமத்தின் மேற்பரப்பு சமமாக உருவாக உதவுகிறது. 

உங்களது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் பிரகாசத்தையும் ஏற்படுத்த வேண்டுமென்றால் ஆளிவிதை ஜெல்லை பயன்படுத்துங்கள். அதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் மந்தமாக இருக்கும் சருமத்திற்கு புத்துயிர் கொடுத்து எப்போதும் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவுகிறது. இதை வழக்கமாக நீங்கள் பயன்படுத்தி வந்தால் சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும் போது இந்தத் தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!
Flaxseed Gel

சேதமடைந்த செல்லை குணப்படுத்தும் ஆற்றல் ஆளிவிதை ஜெல்லுக்கு உண்டு. எனவே முகத்தில் உள்ள சிறிய வெட்டுகள் தீக்காயங்கள் அல்லது தோல் சிராய்ப்புகள் போன்றவற்றை சரி செய்ய ஆளிவிதை ஜெல் பெரிதளவில் உதவும். மேலும் உடலில் எங்காவது அடிபட்டிருந்தால் அந்தப் பகுதிகளிலும் ஆளிவிதை ஜெல்லை பயன்படுத்தி, விரைவில் காயங்களை ஆற்றலாம். 

இப்படி, பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் ஆளிவிதை ஜெல்லை முறையாகப் பயன்படுத்தி, சருமத்தை ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் வைத்திருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com