வெயிலில் இருந்து தப்பிக்க இந்த 7 தொப்பிகளைப் பயன்படுத்துங்கள்!

Caps
Caps

கோடை வெயிலிலிருந்து நம்மை பாதுகாக்க தொப்பிகளைப் பயன்படுத்துவது அவசியம். பொதுவாக தொப்பிகள் நமது தன்னம்பிக்கை உணர்வை அதிகரிப்பதோடு சூர்ய ஒளியினால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்கிறது. மேலும் கண்களைப் பாதுகாப்பதோடு உடல் வறட்சியாகாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் உச்சந்தலையில் வெயில் படாமல், தலைமுடி பாதிக்காமல் இருக்கவும் காரணமாகிறது. அந்தவகையில் கோடையில் எந்தெந்தத் தொப்பிகளைப் பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.

1. Baseball cap:

Baseball Cap
Baseball Cap

இந்தத் தொப்பி வட்டமான க்ரீடம் போன்ற வடிவத்திலும் முன்பகுதியில் கடினமான விளிம்பையும் கொண்டிருக்கும். இந்தத் தொப்பிகள் பருத்தி, பாலிஸ்டர் போன்றவைகளால் செய்யப்பட்டன. இதன் முன்பகுதி கடினமாகவும் வெளியில் கொஞ்சம் நீட்டியப்படியும் இருப்பதால் வெயில் முகத்தில் படாமல் இருக்கும்.

2. Sun Hat:

Sun Hat
Sun Hat

இந்தத் தொப்பிகள் வைக்கோல், பருத்தி மற்றும் பாலிஸ்டர் ஆகியவற்றால் ஆனது. இதுவும் அகலமான விளிம்புகளைக் கொண்டது. இந்தத் தொப்பி கழுத்து, முகம் மற்றும் தோள்கள் என அனைத்தையும் வெயிலிலிருந்து பாதுகாக்கும்.

3. Beanie:

Beanie
Beanie

இது பருத்தி மற்றும் கைத்தறி ஆகியவையால் தயாரிக்கப்படும் தொப்பி. இதனை லேசான கோடை காலங்களிலும், அதிக காற்று வீசும் கோடை காலங்களிலும் பயன்படுத்தலாம்.

4. Trucker Cap:

Trucker Cap
Trucker Cap

இந்த ட்ரக்கர் தொப்பிகளில் பின்புறம் நெட் போன்ற வடிவமைப்பில் இருக்கும். இதனால் காற்றோட்டமாகவும் தனித்துவமாகவும் இருக்கும். இது சாதாரண உடையிலிருந்து அனைத்து உடைக்களுக்குமே ஏற்றதாக இருக்கும்.

5. Visor:

Visor
Visor

இந்தத் தொப்பி முன்பகுதியில் மட்டுமே இருக்கும். இது காற்றோட்டமாகவும், எளிமையாகவும், லேசாகவும் இருக்கும். இதனை பொதுவாக கோல்ஃப் மற்றும் டென்னிஸ் ஆகியவற்றிற்கு பயன்படுத்துவார்கள். தொப்பி அணிய விருப்பமில்லாதவர்கள் கூட இந்த visor தொப்பியைப் பயன்படுத்தலாம்.

6. Bucket Cap:

Bucket Cap
Bucket Cap

பக்கெட் தொப்பி முற்றிலும் அகலமாகவும் அதன் விளிம்புகள் கீழ்நோக்கியும் இருக்கும். இந்தத் தொப்பி முகத்தில் சூரிய ஒளி படாமல் தடுக்க உதவும்.

7. Boater Cap:

Boater Cap
Boater Cap

இந்தத் தொப்பி பார்ப்பதற்கு படகு போல இருக்கும். முன்பெல்லாம் நடுக்கடலில் வெப்பத்தை உணராமல் இருக்க இந்தத் தொப்பியை பயன்படுத்திதான் படகு சவாரி செய்வார்கள். ஆகையால் இதனை நாம் கோடை காலத்திலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எப்போதும் ஈரப்பதத்தை உறிஞ்சும் விதமான பருத்தி துணி பயன்படுத்தி செய்த தொப்பிகளைப் பயன்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com