காட்டன் சேலைகளுக்கு ஏற்ற பிளவுஸ் டிசைன்கள்!
காட்டன் புடவைகளின் வண்ணம் மற்றும் வடிவமைப்பிற்கு ஏற்ப பிளவுஸ் டிசைன்களை தேர்ந்தெடுத்து அணியும்போது மிகவும் அழகாக இருக்கும். நம்முடைய உடலின் அமைப்புக்கு ஏற்ப டிசைன்களை தேர்ந்தெடுக்கலாம். அதுமட்டுமல்ல கழுத்து டிசைன்களை விதவிதமாக வைத்து அசத்தவும் முடியும்
பிளவுஸ்களில் விதவிதமான டிசைன்கள் வைக்கலாம். V கழுத்து, ஸ்டேபிள் கழுத்து, போட் நெக், ரவுண்டு நெக், பா நெக், பூ டிசைன் கழுத்து மற்றும் சதுர கழுத்து என பல கழுத்து டிசைன்கள் உள்ளன. அத்துடன் கழுத்துப் பகுதியில் பைப்பிங் வைத்து தைப்பதும், ஓவர்லேஸ் கொண்டு அழகு படுத்துவதும், ரிப்பன் போன்ற டிசைன்களையும் சேர்த்து மெருகூட்டலாம். கழுத்தின் பின்பகுதியில் கூட ரவுண்ட் நெக், கேப் நெக், வி. நெக் என வெரைட்டி காட்டலாம்.
ஸ்லீவ்லெஸ், 3/4 ஸ்லீவ்ஸ், பஃப் ஸ்லீவ்ஸ், ஃபுல் ஸ்லீவ் என பல கை டிசைன்கள் உள்ளன. ஸ்லீவ் டிசைன்களில் எம்பிராய்டரி, கட் வொர்க் போன்ற வேலைப் பாடுகளையும் சேர்க்க மிகவும் அழகாக இருக்கும். நமக்கு விருப்பமானதும், நம் உடலமைப்பிற்கு ஏற்றதுமான கை டிசைன்களை தேர்ந்தெடுத்து தைக்கலாம்.
துணிகளின் துண்டுகளை இணைத்து அழகான பிளவுஸ்களை உருவாக்க முடியும். இது காட்டன் புடவைகளுக்கு மிகவும் பொருத்தமாகவும், அழகாகவும் இருக்கும். நல்ல ரிச் லுக் கொடுக்கும்.
காட்டன் புடவைகளின் பார்டர்களுக்கு பொருந்தக்கூடிய பிளவுஸ் டிசைன் இது. எளிமையான அதே சமயம் நல்ல லுக் கொடுக்கக் கூடிய பிளவுஸ் இது.
எம்ப்ராய்டரி டிசைன்கள் என்பது தையல் வேலைபாடுகள் அதிகம் உள்ள மிகவும் தனித்துவமான டிசைனாகும். இது சாதாரண காட்டன் புடவைகளுடன் அணிந்தால் கூட மிகவும் அழகாக பொருந்தக்கூடிய வகையில் இருக்கும்.
பிளவுஸில் லேஸ் வேலைப்பாடுகள் செய்வது அழகு மட்டுமல்ல, கவர்ச்சிகரமாகவும் இருக்கும். நம் கற்பனைக்கு ஏற்ப அழகான டிசைனில் லேஸ்களை வைத்து அணிவது நம் அழகை கூட்டும்.