
சுரைக்காய் ஃபேஸ் பேக் பற்றி நீங்கள் கேள்விப்பட்டீருக்கிறீர்களா? ஆம்! சுரைக்காய் ஃபேஸ் பேக், உடனடி பொலிவை உங்களுக்கு கொடுக்கும்.
பொதுவாகவே சுரைக்காய், ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தரும் காய். அதாவது சுரைக்காயில் அதிக வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அதோடு நார்ச்சத்து, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற பல பண்புகளும் அதிகமாக உள்ளன. இந்த பண்புகள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்குகின்றன. அதைபோல் சருமத்திற்கும் அதிக நன்மைகளை அள்ளித் தருகின்றன.
டிப்ஸ் 1 :
பெண்கள் மற்றும் ஆண்கள் உபயோகிக்கும் முல்தானி மிட்டி சருமத்திற்கு சிறந்தது. இந்த முல்தானி மிட்டியுடன், சுரைக்காயை சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்திற்கு உடனடி பொலிவை எளிதில் பெற முடியும். அதை எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
முதலில், சுரைக்காயை நன்கு அரைத்து, அதனுடைய சாறை பிழிந்து எடுக்க வேண்டும். அந்த சாறுடன் முல்தானி மிட்டியை சேர்த்து, பேஸ்டாக கலக்க வேண்டும். பின் அந்த பேஸ்டை ஃபேஸ் பேக்காக முகத்தில் தடவி, காய்ந்த பின் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் 2 அல்லது 3 முறைக் கூட பயன்படுத்தலாம். விழாக்களுக்கு செல்லும் நேரங்களில், இது மேற்கொண்டால் எளிதில் நீங்கள் நினைக்கும் பொலிவை அடையலாம்.
டிப்ஸ் 2:
வெள்ளரிக்காய் மற்றும் சுரைக்காய் காம்போ சருமத்திற்கு சிறந்த தீர்வு. வெள்ளரிக்காய் சருமத்தை ஈரப்பதமாக வைப்பதற்கு உதவியாக இருக்கிறது. மேலும் சருமத்திற்கு பொலிவையும், வெண்மையையும் கொடுக்கிறது. இதில், வெள்ளரிக்காயுடன் சுரைக்காய் சேரும்போது உடனடி தீர்வை பெற முடியும்.
இதற்கு முதலில் சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காயை நன்கு அரைத்து, அதனுடைய சாறை துணி அல்லது வடிக்கட்டி மூலம் பிரிக்க வேண்டும். பிரித்த சாறை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஃபேஸ் பேக் காய்ந்ததும் முகத்தை நீரில் கழுவினாலே, உடனடி தீர்வை நீங்களே பார்க்க முடியும்.
குறிப்பு: இது போன்ற எந்த அழகுசாதனப் பொருளாக இருந்தாலும், அதை பயன்படுத்தும்போது முதலில் கைகளில் தடவி சோதித்துக் கொள்வது நல்லது.