போட்டோக்ஸ் ஊசி போட்டுக்கப் போறீங்களா? அப்போ கட்டாயம் இதைத் தெரிஞ்சிக்கணும்!

போட்டோக்ஸ் ...
போட்டோக்ஸ் ...pixabay.com

ந்தக் காலத்தில் அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக மக்கள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக உள்ளனர். அதில் ஒன்றுதான் போட்டோக்ஸ் ஊசி போட்டுக்கொள்வதாகும். இந்த போட்டோக்ஸ் ஊசியை இளமையாக இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவே மக்கள் அதிகமாகப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

‘போட்டோக்ஸ்’ என்பது ஒருவகை பேக்டீரியாவிலிருந்து எடுக்கப்பட்ட நச்சைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த ஊசியை போடும்பொழுது, ஊசியைப் போட்டுக்கொண்ட இடத்திலிருக்கும் தசைகளை நகரவிடாமல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தடுத்து வைக்கிறது. இதனால் அந்த இடத்திலுள்ள சுருக்கங்கள் குறைந்து, இளமையான தோற்றத்தைப் பெற முடிகிறது.

‘கிளஸ்டிரீடியம் பொட்டுலினம்’ என்னும் பாக்டீரியாவிருந்து உருவாகும் நியூரோ டாக்ஸினே போட்டோக்ஸில் பயன்படுத்தப்படுகிறது. பொட்டுலினம் நச்சு எனும் பாக்டீரியாவானது, மண் மற்றும் கெட்டுப்போன உணவுகளிலும் உற்பத்தியாகக்கூடியது. பொட்டுலினம் நச்சை அதிகமாக உட்கொண்டாலோ, அல்லது இந்த பேக்டீரியா உடலில் உள்ள காயத்தில் சென்றுவிட்டாலோ, அது  நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய நோய் வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

போட்டோக்ஸ் ஊசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் பயன்கள்:

போட்டோக்ஸ் ஊசி போடுவதால் நரம்புகளிலிருந்து வரும் ரசாயன சமிஞ்ஞைகளைத் தடுத்து தசை சுருக்கம் நிறுத்தப்படுகிறது. இதனால் முகத்தில் இருக்கும் தசைகள் ரிலாக்சாக இருப்பதால் முகச்சுருக்கம், சிறிய கோடுகள் போன்றவை ஏற்படாது. எனினும் இது தற்காலிகமானதேயாகும்.

கண்களை நகர்த்துவதற்கு உதவும் தசையின் சமநிலையற்ற தன்மையே மாறுக்கண் நோய் வருவதற்கு காரணமாகும். போட்டோக்ஸ் ஊசி போட்டுக்கொள்வதால் இதைச் சரிப்படுத்தலாம்.

அதிகப்படியான வியர்வை உடலில் வருவதை போட்டோக்ஸ் குணப்படுத்தும்.

போட்டோக்ஸ்  சிகிச்சை...
போட்டோக்ஸ் சிகிச்சை...pixabay.com

மைக்ரேன் போன்ற அதிகப்படியான தலைவலியைப் போக்க உதவும். நாள்பட்ட ஒற்றை தலைவலிக்கு போட்டோக்ஸ் சிறந்த அருமருந்தாகும்.

போட்டோக்ஸ் சிறுநீர்ப்பையால் ஏற்படும் அதிகப்படியான பிரச்னைகளைப் போக்ககூடியதாகும்.

போட்டோக்ஸ் முகச்சுருக்கத்தை போக்கி இளமையான தோற்றத்தை தருவது மட்டுமில்லாமல் மென்மையான பளபளப்பான சருமத்தையும் தருகிறது.

இந்தச் செயல்முறை செய்வதற்கு 3,000 ரூபாய் முதல் தொடங்கி 20,000 வரை செலவாகிறது. எனினும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் விலையை பற்றி கவலையின்றி இதைச் செய்துகொள்ள முன்வருகிறார்கள்.

போட்டோக்ஸ் ஊசி முடி வளர்ச்சிக்கும் வெகுவாக உதவுகிறது. போட்டோக்ஸ் ஊசியை உச்சந்தலையில் போட்டுக்கொள்வதால், தசைகள் ரிலாக்ஸ் ஆகி ரத்த ஓட்டம் அதிகரித்து தலைமுடிக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. இதுவே முடிவளர்ச்சிக்குக் காரணமாகிறது. இந்தச் செயல்முறையை செய்துகொள்ள ரூபாய் 14,000 வரை செலவாகிறது.

போட்டோக்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

போட்டோக்ஸ் ஊசி பயன்படுத்துவதால் எப்படி பல நன்மைகள் இருக்கிறதோ, அதேபோல இதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படுவதுண்டு.

போட்டோக்ஸ் ஊசி போடப்பட்ட இடம் சிவந்து போதல், நோய் தொற்று ஏற்படுதல், வலி போன்றவை ஏற்படும்.

உணவை விழுங்குவதில் சிரமம், மயக்கம், தலைவலி, தசை பலவீனமடைதல், குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
உங்க கூந்தல் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இதோ எளிய டிப்ஸ்!
போட்டோக்ஸ் ...

கர்ப்பக்காலத்தில் பெண்கள் கண்டிப்பாக போட்டோக்ஸ் ஊசியைப் பயன்படுத்த கூடாது.

போட்டோக்ஸ் ஊசியை அதிகமாக சினிமா போன்ற துறைகளில் உள்ள பிரபலங்கள் தங்கள் அழகையும், இளமையையும் தக்க வைத்துக்கொள்வதற்காகப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் போட்டோக்ஸ் ஊசி 3 முதல் 4 மாதங்கள் வரையே தாக்குப்பிடிக்கும். ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்திவிட்டால் திரும்பவும் தோல் சுருக்கங்கள் ஏற்படும். அதற்காக அடிக்கடி ஊசி போட்டுக்கொண்டால், மருந்து பலனளிக்காமல் போய்விடும்.

எனவே, கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரையின்றி இதுபோன்ற ஊசிகளை பயன்படுத்தக்கூடாது. மருத்துவரின் மேற்பார்வையிலேயே இதுபோன்ற சிகிச்சைகளைச் செய்துகொள்வது சிறந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com