Business Casuals பற்றி ஆண்கள் அறிய வேண்டியவை! 

Business Casuals for Men.
Business Casuals for Men.

இன்றைய மாறிவரும் உலகில் அலுவலகங்களில் அணியக்கூடிய பிசினஸ் கேஷுவல் பற்றி நாம் அனைவருமே அறிய வேண்டியது அவசியமாகிறது. அலுவலகங்களில் நாம் அணியும் உடைதான் நாம் யார் என்பதைத் தெரியப்படுத்தி, நமக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தருகிறது. எனவே இந்த பதிவில் ஆண்கள் அணியக்கூடிய பிசினஸ் கேஷுவல்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

பிசினஸ் கேஷுவல்ஸ் என்பது நாம் சாதாரணமாக அணியும் உடையை விட முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் பணி நிமித்தமாக நாம் பலரை சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்பதால், நம்மை பிறருக்கு சிறப்பாக வெளிப்படுத்த பொருத்தமான ஆடைகள் தேவைப்படுகிறது. இத்தகைய உடைகளால் நீங்கள் அலுவலகங்களில் வெற்றியாளராக மாற முடியும். குறிப்பாக ஆண்கள் அலுவலக உடை சார்ந்த விஷயங்களில் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, எதுபோன்ற உடைகளை பிசினஸ் கேஷுவலிக்கு நாம் தேர்ந்தெடுக்கலாம்? என்பதுதான்.  

சட்டை: நல்ல பொருத்தமான சட்டையை பிசினஸ் கேஷுவல்ஸாக தேர்ந்தெடுப்பது நல்லது. அவை குறிப்பாக முழு கை கொண்டதாகவும், ஒரே நிரத்தில் இருக்கும்படியாகவும் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு சிம்பிளாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஒரு ப்ரொபஷனல் தோற்றத்தை உங்களுக்கு இது ஏற்படுத்தும். 

பேண்ட்: பேட்டை தேர்வு செய்யும் போதும், அடர் நேரத்தில் தேர்வு செய்யாமல், மைல்டு நிறத்தில் இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இவை உங்களுடைய சட்டைக்கு பொருந்தும் படியாக இருக்க வேண்டும். என்னென்ன கலர் சட்டைக்கு எதுபோன்ற பேண்ட் போடலாம் என இணையத்தில் தேடிப் பார்த்து, அதற்கு ஏற்றவாறு வாங்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக சட்டைக்கும், பேண்டுக்கும் குவாலிட்டி மிக முக்கியம். நீங்கள் அதிக உடை அணிந்து செல்வதை விட, தரமான உடை அணிகிறீர்களா என்பது மிக முக்கியம். 

காலணிகள்: உங்களை பிறருக்கு சிறப்பாக எடுத்துரைக்கும் முக்கிய விஷயங்களில் காலணியும் ஒன்று. எனவே இதை உங்களுடைய உடைக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள். கருப்பு மற்றும் காபி நிறத்தில் ஃபார்மல்ஸ் ஷூ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இவை இரண்டும் எந்த உடைக்கு வேண்டுமானாலும் சூட் ஆகும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் என்ன மாதிரியான உடை மற்றும் காலணி அணிய வேண்டும் தெரியுமா?
Business Casuals for Men.

லேயர் உடைகள்: லேயர் உடைகள் என்பது நம் சட்டை அல்லது டீசர்ட் போட்டு மேலே அணியும் உடையாகும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் நல்ல பொசிஷனில் இருந்தால், பிலேசர் அணியும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான லுக்கை மேலுயர்த்திக் காட்டும்.  

அணிகலன்கள்: அலுவலகம் என்று வந்தாலே அதிகப்படியான அணிகலன்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இங்கே உங்களுடைய வெளித்தோற்றத்தை வைத்து அதிகம் எடை போடுவார்கள் என்பதால், குறைவான அணிகலன்களுடன் இருப்பதே நல்லது. ஏதாவது மீட்டிங் சென்றால் டை அணிந்து கொண்டு செல்லுங்கள். சாதாரணமாக இருப்பதுதான் பிசினஸ் ஆடைகளின் ஹால்மார்க் எனலாம். எனவே அதிகப்படியான அணிகலன் அணிவதைத் தவிருங்கள். 

இப்படி பிசினஸ் கேஷுவல் சார்ந்து பல விஷயங்களை ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான இடங்களில் ஆண்கள் தான் மிக முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதால், மேற்குறிப்பிட்ட ஆடை சார்ந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, உங்களை சிறப்பானவர்களாக அலுவலகத்தில் வெளிப்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com