கலரிங் செய்த முடிக்கு ஷாம்பு போடலாமா?

Hair Colouring maintaining tips
Hair Colouring
Published on

முடிக்கு ஹேர் கலரிங் செய்த பிறகு ஷாம்பு பயன்படுத்தலாமா போன்ற எண்ணற்ற சந்தேகங்கள் எழும். அந்தவகையில் கலரிங் செய்த பிறகு முடியை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம்.

முன்பெல்லாம் வெள்ளை முடிக்கு கருப்பு கலர் அடிப்பது வழக்கமாக இருந்து வந்தது. அதுவும் வயதான பிறகே. ஆனால், இப்போது ஃபேஷன் வளர்ந்துவரும் நிலையில், பெண்கள் மற்றும் ஆண்கள் சிறு வயதிலேயே கருப்பான முடியில் விதவிதமான கலர் அடித்துக் கொள்கிறார்கள். சிலர் கலரிங் செய்த பிறகு அதைப் பராமரிப்பதில் தவறிவிடுவதால், கலரிங் மங்கிப் போய்விடுகிறது. அது போனால் கூட பரவாயில்லை, முடியின் டெக்ஸ்ச்சர் பாதிப்படைகிறது.

சரி, வாருங்கள் கலரிங் செய்த பிறகு முடியை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம்.

கலரிங் செய்த பிறகு மூன்று நாட்களுக்கு அதாவது 72 மணி நேரத்திற்கு தலை குளிக்க கூடாது. இதனால், கலர் நன்றாக கூந்தலில் ஒட்டிக்கொள்ளும். முடியின் கலர் நன்றாக தெரியும். அதன்பிறகு தலை குளிப்பதற்கு சல்பேட் இல்லாத ஷாம்புவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரசாயனங்கள் மற்றும் தண்ணீரில் உள்ள க்ளோரின் போன்றவற்றிலிருந்து முடியை பாதுகாக்க வடிகட்டிய நீரில் குளிப்பது நல்லது.

நீங்கள் முடிக்கு கலர் செய்துவிட்டால், ஷாம்புவிற்கு முன்னதாக கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். Colour safe shampoo மற்றும் Conditioner ஐ பயன்படுத்துங்கள். இவை உங்கள் முடியின் கலர் மற்றும் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும்.

அடிக்கடி தலை குளிப்பவர்கள் dry shampoo மற்றும் colour safe shampoo ஆகியவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
இளநரையை தடுக்க சில அற்புத யோசனைகள்!
Hair Colouring maintaining tips

சூரிய ஒளியிலிருந்து முடியை பாதுகாப்பது மிகவும் முக்கியம். ஆகையால், தொப்பி அல்லது ஸ்கார்ஃப் பயன்படுத்துங்கள். அதேபோல், கலரிங் செய்த பிறகு ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏனெனில், அதிகம் பயன்படுத்தினால் நிறம் மங்கத் தொடங்கிவிடும்.

சுடு நீரைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். குளிர்ந்த நீரில் குளிக்கலாம். அல்லது சாதாரண நீரில் கூட குளிக்கலாம்.

முக்கியமாக Hair Chroma Gloss ஐ பயன்படுத்தினீர்கள் என்றால், உங்கள் முடி அவ்வளவு ஷைனாக அழகாக இருக்கும்.

இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள். நிச்சயம் உங்களின் கலரிங் ஹேர் அவ்வளவு அழகாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com