மழைக்காலங்களில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாமா? வேண்டாமா?

sunscreen in rainy days?
sunscreen in rainy days?
Published on

சூரிய ஒளி சருமத்தில் பாதிப்பை உண்டாக்கக் கூடாது என்பதற்காகதானே சன்ஸ்க்ரீன். சூரிய ஒளியே இல்லையென்றால் எதற்காக சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும்? என்ற சந்தேகம் அனைவருக்குமே எழும்.

மழைக்காலம் தொடங்கிவிட்டது. இனி எங்குப் பார்த்தலும் கருமேகம், எப்போது பார்த்தாலும் மழை தான். எங்கிருந்து வெயில் வரப்போகிறது. எதற்காக சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க வேண்டும், எதற்காக சன்ஸ்க்ரீன் என்று அதைப் பயன்படுத்தாமல் மட்டும் இருக்காதீர்கள்…

சன்ஸ்க்ரீனின் முக்கிய வேலை புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாப்பதுதான். இந்த கதிர்கள் மழைக்காலங்களில் கூட இருக்கலாம். சூரியன் மேகங்களுக்கு பின்னே மறைந்திருக்கும் அல்லவா? சூரியன் எப்படியோ பகலில் இருக்கிறான் அல்லவா? சூரியன் மேகங்கள் வழியாகவும் புற ஊதா கதிர்களை வெளியிடும். இது உங்கள் சருமத்தையும் பாதிக்கும். இதில் மற்றொரு விஷயம் தெரியுமா? பூமி ஈரமாக இருக்கும்போது இந்த யுவி கதிர்கள் ஈரத்தில் பவுன்ஸ் ஆகி உங்கள் சருமத்தை அடையுமாம். ஆகையால், எப்போதும் சன்ஸ்க்ரீன் போடுவதைத் தவிர வேறு வழி நம்மிடம் இல்லை.

மழைக்காலங்களில் எந்தமாதிரியான சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது?

லோஷன், பவுடர் மற்றும் ஸ்டிக் சன்ஸ்க்ரீன்களில் லோஷன் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், லோஷன் ஃபார்முலா சருமத்தை ஹைட்ரேட் செய்து, மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.

முகத்தில் எண்ணெய் வடிவதுபோல் தோன்றினால், அவர்கள் பவுடர் மற்றும் ஸ்டிக் சன்ஸ்கிரீன்கள் மேக்கப்பில் பயன்படுத்தப்படலாம். பவுடர் மற்றும் ஸ்டிக் சன்ஸ்கிரீன் இலகுரக மற்றும் ஒட்டும் தன்மை இல்லாமல் சருமத்திற்கு எளிதில் பொருந்தக்கூடியதாகவும், பிசுபிசுப்புத் தன்மையில்லாமலும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பொடுகை நீக்குவதற்கு முல்தானி மிட்டியை இப்படி பயன்படுத்திப் பாருங்க!
sunscreen in rainy days?

பொதுவாக இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால்  காலையில் வெளியே சென்றால் இரவு வீடு திரும்புபவர்கள் ஸ்டிக் சன்ஸ்க்ரீனை பயன்படுத்தலாம். இது எடுத்துக்கொண்டு செல்வதற்கு வசதியாக இருக்கும். குறிப்பாக காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை கட்டாயம் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும்.

அனைத்து சீசன்களிலும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும் என்றே கூறப்படுகிறது. ஆகையால், மழை வெயில் என்று பிரிக்காமல், யுவி ரேஸிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com