
தேவையான பொருட்கள்:
பாசிப் பயிறு - 125 கிராம்
கடலைப் பருப்பு - 125 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
பூலாங்கிழங்கு - 125 கிராம்
ஆவாரம் பூ
ரோஜா இதழ் - 50 கிராம்
கசகசா 25 கிராம்
துளசி இலை காய்ந்தது - ஒரு கை அளவு
சந்தனப் பவுடர் - 1 டப்பா
காய்ந்த எலுமிச்சம்பழத் தோல் - 6
செய்முறை:
இதை மருந்துக் கடையில் வாங்கிச் சுத்தம் செய்து கல் இல்லாமல் வீட்டில் இடித்து மிஷினில் அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்கலாம். கல் திருகலிலும் அரைக்கலாம். இதைச் சோப்பிற்குப் பதிலாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
அப்படிக் குளித்தால் ஏற்படும் நன்மைகள்:
1.நாளடைவில் சருமம் பொலிவாகத் தெரியும்.
2. பருக்கள் வராது. கை, காலில் இருக்கும் அளவுக்கதிகமான உரோமங்கள் உதிர்ந்துவிடும்.
3. கரப்பான், சிரங்கு முதலியவை மறைந்து விடும்.
4. இரவில் தேய்த்துக் குளித்து விட்டுப் படுத்தால் கொசு கடிக்காது. நறுமணம் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.