முகத்தின் அழகினை மேம்படுத்தும் ஆமணக்கு எண்ணெய்!

Castor oil - Beauty Tips
Castor oil
Published on

நம்மைச் சுற்றி நிலவும் பல்வேறு சுற்றுப்புற சூழல்களின் காரணமாக முகத்தின் அழகினையும் ஆரோக்கியத்தையும் பேணிக்காப்பது என்பது இன்றைய காலகட்டங்களில் ஒரு சவாலாகவே இருக்கிறது. அதிகப்படியான வெப்பம் மற்றும் அதிகப்படியான மாசுக்களின் காரணமாக முகத்தில் அடிக்கடி தோன்றும் முகப்பருக்கள், எரிச்சல், முகச்சுருக்கம், அலர்ஜி போன்றவற்றை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் சரி செய்ய இயலும். எனவே அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ஆமணக்கு எண்ணெயில் அதிகமாக ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. இவை முகத்தில் உள்ள தேவையற்ற அசுத்தங்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. மேலும் வெப்பம், மாசுக்கள் போன்றவற்றால் முகத்தில் உள்ள கோலோஜன் தாக்கப்படுவதால் ஏற்படும் முகச்சுருக்கத்தை சரி செய்வதற்கு ஆமணக்கு எண்ணெய் பயன்படுகிறது.

மேலும் முகப்பருவை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை அழித்து முகப்பரு வருவதில் இருந்து காத்துக் கொள்ள உதவுகிறது. சிலருக்கு முகத்தில் அடிக்கடி வீக்கங்கள் தோன்றுதல், கண்களுக்கு அடியிலான பகுதிகள் வீங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றை சரி செய்வதற்கு ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம்.

ஆமணக்கு எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தும் போது முகத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசை தக்கவைக்கப்படுவதோடு அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் எரிச்சலையும் குணப்படுத்த முடியும். மேலும் உதடுகளில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியை போக்குவதற்கும், வெடிப்புகளை சரி செய்வதற்கும் ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தோல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் இவ்வளவு நன்மைகளா? 
Castor oil - Beauty Tips

எப்படி பயன்படுத்தலாம்?

ஆமணக்கு எண்ணெய் பார்ப்பதற்கு பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும். எனவே இதனை பயன்படுத்தும் போது இதனோடு சம அளவில் தேங்காய் எண்ணெய், ஆல்மண்ட் ஆயில், ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை சம அளவில் எடுத்து பயன்படுத்தலாம். மேலும் ஆமணக்கு எண்ணெயோடு (Shea Butter) சியா பட்டரையும் சேர்த்து பயன்படுத்தலாம்.

எப்பொழுது பயன்படுத்துவது?

தினமும் இரவில் தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்து இரண்டையும் சம அளவில் கலந்து முகத்தில் நன்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு காலை எழுந்தவுடன் சுத்தமான நீரில் கழுவிக் கொள்ளலாம்.

பகல் நேரங்களில் பயன்படுத்துவதாக இருந்தால் 3 நிமிடம் முகத்தில் நன்கு மசாஜ் செய்துவிட்டு சுத்தமான ஒரு காட்டன் துணியை எடுத்து நன்கு துடைத்துவிட்டு பின் வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
தலைக்கு குளித்து முடித்த பின்னர் சிக்கு எடுக்கலாமா?
Castor oil - Beauty Tips

மேலும் ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் கடலை மாவு இவை மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போன்று பூசிக்கொண்டு 30 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவலாம். இதனால் முகத்தில் உள்ள நாள்பட்ட தழும்புகள் மங்கு, முகச்சுருக்கம் போன்றவை மறையும்.

குறிப்பு:

முகத்திற்கு ஏதேனும் புதிதாக ஒன்றை உபயோகிப்பதற்கு முன் அதனை கைப்பகுதியில் ஒரு இடத்தில் தடவி ஒரு நாள் முழுவதும் ஏதேனும் அரிப்புகள், அலர்ஜிகள் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து விட்டு, பின் அதனை முகத்திற்கு பூசுவதன் மூலம் தேவையற்ற உபாதைகளிலிருந்து விடுபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com