Charcoal Face Mask
Charcoal Face Mask

Charcoal Face Mask: முகச்சருமத்திற்கு பல நன்மைகளை தரும் ஃபேஸ் மாஸ்க்!

Published on

பல வகையான ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முகச்சருமத்திற்கும் ஏற்ப கண்டுபிடிக்கப்பட்டுதான் வருகிறது. ஆனால், நம்முடைய முகத்திற்கு எந்த ஃபேஸ் மாஸ்க் செட் ஆகும் என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியம். அந்தவகையில் Charcoal Face Mask பற்றிப் பார்ப்போம்.

சருமத்திற்கு பயன்படுத்தப்படும் Charcoal என்பது ஆக்டிவேட்டட் கரித்தூளாகும். ஆக்டிவேட்டட் கரித்தூள் என்பது கார்பனின் பதப்படுத்தப்பட்ட வடிவம் ஆகும். செயல்படுத்தப்பட்ட கரி, அழகுசாதன பொருள்களில் பரவலாக பயன்படுத்தப்படுவதோடு, வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கரித்தூள் பயன்பாடு சருமத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது.

சருமத்தின் துளைகளில் இருக்கும் துகள்களை ஆழமாக சுத்தம் செய்ய இந்த சார்கோல் ஃபேஸ் மாஸ்க், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சருமத்தில் இருக்கும் துகள்களால் சருமம் எளிதில் வெடிப்பு, எண்ணெய் பசை போன்ற பலவற்றை உண்டாக்கும். இதை எளிதில் சரிசெய்ய முடியாது. தடுக்கவும் முடியாது. இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வை, கரித்தூள் கொடுக்கும்.

பெரிய அல்லது சிறிய சருமத்துளைகள், சருமம் மற்றும் பிற சுரப்புகளின் கட்டமைப்பால் அடைக்கப்படுகின்றன. அப்போது இந்த சார்கோல், அடைப்பை சரி செய்து சருமத்தை சுத்தமாக்க உதவுகிறது. இதனால் சருமத்தில் தொற்று முகப்பரு போன்றவை குறைகிறது.

அதிகப்படியான வியர்வை, திறந்த காயம், அழுக்குப்படிவது மற்றும் முகச்சீர்ப்படுத்தும் கருவிகளை பலரும் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் சருமத்தில் அழுக்குகள் தேங்கும். அப்போது சார்கோல் பயன்படுத்தினால், நல்ல பலனைத் தரும்.

ஆக்டிவேட்டட் கரித்தூளில் உள்ள துகள்கள் சருமத்தில் இறந்த சரும செல்களை துடைக்க உதவுகிறது. மேலும் பளிச்சென்ற நிற சருமத்தை அளிக்க உதவுகிறது.

ஆக்டிவேட்டட் சார்கோல் எண்ணெய் சருமத்துக்கு சிறந்த துணையாக இருக்கும். சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்குவதால் சருமம் வறண்டிருந்தாலும் கூட, சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் பராமரிக்கவும் இது உதவுகிறது. முகச்சருமத்திற்கு ஏற்ப ஆக்டிவேட்டட் சார்கோல் தயாரிப்புகளில் சரியானதை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
கூந்தலின் 3 வகைகளும், அவற்றைப் பராமரிக்கும் முறையும்!
Charcoal Face Mask

மேலும் இதை ஆலோவேரா உடன் கலந்து பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் செய்கிறது. சருமத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்கு சீரான பிரகாசத்தையும் கொடுக்க உதவுகிறது. 

சுத்தமான சருமத்திற்கும், பளிச்சென்ற நிறத்திற்கும் கண்களை மூடிக்கொண்டு சார்கோல் ஃபேஸ் பேக்கை நீங்கள் பயன்படுத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com