கோ ஆர்டினேடெட் செட்ஸ்! ட்ரெண்டி & பெஸ்ட்!

co ordinated sets
co ordinated sets Image credit - snfonlinestore.com

ற்போது கோ ஆர்டினேடெட் செட்கள், (கோ ஆர்ட்ஸ்) ட்ரெண்டிங்கில் உள்ளன. கோ-ஆர்ட் செட் என்பது டாப் மற்றும் பாட்டம் ஒரே நிறத்தில், ஒரே டிசைனில் வடிவமைக்கப்படும் உடைகள். இவற்றுள் சில, பெல்ட், ரோப் போன்ற அக்சஸரீஸ் உடன் கிடைக்கின்றன. இவை பலவித ஸ்டைல்களில், வண்ணங்களில், கிடைக்கின்றன. கேஷுவல் டி-ஷர்ட் முதல் ஷார்ட்ஸ் வரையிலும், மிக அழகான பிளேசர், ஸ்கர்ட், டாப் குர்தீஸ் & பேன்ட்ஸ் என சகலவிதமான வடிவங்களிலும் வருகின்றன.

கோ ஆர்டினேடெட் செட்ஸ் ஏன் பெஸ்ட்?

1. விரைவாகத் தயாராகலாம்:

பீரோ நிறைய ஆடைகள் இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு ஒன்றுமே இல்லை என்பது போலவும் அதனால், எதை அணிவது என்கிற குழப்பமும் இருக்கும். காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் நின்று நிதானமாக ஆடைகளை செலக்ட் செய்யமுடியாது. ஆனால், கோ-ஆர்ட் செட்டுகளை மிக விரைவாக செலக்ட் செய்து, அணிந்துகொண்டு செல்லலாம். அதுபோல ஒரு திருமணத்திற்குச் சென்றாலும் விரைவில் தயாராகலாம். இந்த ஆடைகள் ‘செலெக்ஷன்’ நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

2. தனித்துவ தோற்றம்:

இவை பல்வேறு வடிவங்களில், பல்வேறு விதங்களிலும் கிடைக்கின்றன.  தடித்த மற்றும் வண்ணமயமான பிரிண்ட்கள் முதல் கிளாசிக் நியூட்ரல்கள் வரை பலவிதமான பாணிகள், வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் வருகின்றன. ஒரு கிளாசிக் டூ பீஸ் சூட் அல்லது நவ நாகரிகமான கிராப்டாப் மற்றும் ஸ்கர்ட் காம்போவாக இருந்தாலும் பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கும். தனித்துவமான தோற்றமளிக்கும்.

3. பேக்கிங் சுலபம்:

பயணத்திற்குப் பேக்கிங் செய்யும்போது பலவகையான டாப்ஸ் அண்ட் பாட்டம்களை பேக்கிங் செய்வதற்குப் பதிலாக இரண்டு மூன்று கோ ஆர்டினேடெட் செட்களை மட்டும் பேக் செய்யலாம். இதனால் சூட்கேஸில் நிறைய இடம் இருக்கும். பேக்கிங்கும் ஈஸி. போகிற இடத்தில் புதுவிதமான ஸ்டைல் ஆகவும் அமையும்.

4. டிரெண்டி லுக்:

co ordinated sets
co ordinated setsImage credit-lavanyathelabel.com

இவை ‘ஸ்மார்ட் & ஸ்டைலிஷ்’ ஆன ஒரு தோற்றத்தைத் தருகின்றன. அதனால், நீங்கள் தற்போதைய ட்ரெண்டிங்கில் இருக்கிறீர்கள் என்பதை உலகிற்கு நிரூபிக்கிறீர்கள். அதுவும்  கோ-ஆர்ட் செட்டுடன்  பொருந்தக்கூடிய வகையில் ஸ்னீக்கர்ஸ் அல்லது ஹீல்ஸ் அணிந்துகொண்டால் பார்ப்பவர்களுக்கு ‘கண்ணு படப் போகுதம்மா’ன்னு பாடத் தோன்றும். பகல் நேரத்தில் ஸ்னீக்கர்ஸ் அணிந்தும், மாலை நேரத்தில் ஹீல்ஸ் அணிந்தும் செல்லலாம்.

5. வெவ்வேறு பருவநிலைக்கு ஏற்றவை:

கோ-ஆர்ட்களை ஆண்டு முழுவதும் அணியலாம். கோடைகால கோ-ஆர்ட்ஸ் மற்றும் குளிர்கால கோ-ஆர்ட்ஸ் இரண்டும் கிடைக்கின்றன. கருப்பு, அடர் பழுப்பு, காக்கி மற்றும் க்ரீம் வண்ணங்கள் போன்றவை அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற வண்ணங்கள் ஆகும். அந்தந்தப் பருவநிலைக்கேற்ப வெவ்வேறு மெட்டீரியல்களில் (காட்டன், பாலியஸ்டர், பட்டு போன்றவை) வாங்கி உடுத்தலாம். ரெடிமேடாகவோ அல்லது துணி வாங்கி விருப்பத்துக்கு ஏற்றவாறோ வடிவமைத்து உடுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com