தன்னம்பிக்கை தரும் சிவப்பு லிப்ஸ்டிக்!

தன்னம்பிக்கை தரும் சிவப்பு லிப்ஸ்டிக்!
Published on

ல் டைம் ப்யூட்டி ட்ரென்ட் என்று சொல்வார்கள். அதாவது சில ஃபேஷன்கள் மாறவே மாறாது; காலத்துக்கும் நிற்கும். 50-களின் மர்லின் மன்றோ ரெட் லிப்ஸ்டிக்தான் இன்றளவும் 'மோஸ்ட் ஐ கானிக் ப்யூட்டி ட்ரென்ட்'.

இன்றைய லேட்டஸ்ட் ஃபேஷன், ரெட் லிப்ஸ்டிக் என்னதான் நவநாகரிகமா ட்ரஸ் பண்ணி, ஹேர் ஸ்டைல் பண்ணிக் கொண்டாலும் கம்ப்ளீட் லுக் வருவது ரெட் லிப்ஸ்டிக்கினால்தான்.

ஸ்டைலிஷா, க்ளாமரா, சக்ஸஸ்ஃபுல் மற்றும் ஸ்ட்ராங்கான கேர்ளா தெரியணுமா? போடுங்க ரெட் லிப்ஸ்டிக்கை. ஆண்களுக்கு 'டை போட்டால் எப்படி ஒரு கம்பீர லுக் வருகிறதோ அதுபோல் பெண்களுக்குச் சிவப்பு லிப்ஸ்டிக்கில் ஒரு தன்னம்பிக்கையும் பொலிவும் மிளிரும்.

ஒரு அழகான தங்க நெக்லஸ், ஹாரம் போட்டாலோ, நல்ல தரமான பிராண்டட் ஹை ஹீல்ஸ் அணிந்தாலோ, உயர்தர ஹாண்ட்பேக் எடுத்துக் கொண்டாலோ, காஸ்ட்லியான, வித்தியாசமான ட்ரஸ் போட்டாலோ வரும் மகிழ்ச்சி இந்தச் சிவப்பு இதழ்களினால் வரும். 'ரெட் லிப்ஸ்டிக் இஸ் எ ஸ்டேட்மென்ட்' என்கின்றனர் அழகுக் கலைஞர்கள்.

மடோனா, எலிஸபெத் டெய்லர், பாடகி க்வென் ஸ்டெஃபானி, ஏஞ்சலினா ஜோலி என ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமல்லாது கரீனா கபூர், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களும் ரெட் லிப்ஸ்டிக் போடத் தயங்குவதில்லை.

நாம் போடலாமா, கலரா இருக்கறவங்கதான் போடணுமோ, நமக்கு சூட் ஆகுமா என்ற வீணான தயக்கம் வேண்டவே வேண்டாம். நம்மை அழகாக்கிக் கொள்ள யாரிடம் அனுமதி பெற வேண்டும்?

ரெட் என்றாலும் அதிலும் பல ஷேட்கள் உள்ளன. உங்களுடைய ஸ்கின் டோனுக்கு ஏற்றாற்போல் வாங்கிப் போடவும். இது ஒரு கிளாஸிக் கலர். கிளாஸி லுக் கொடுக்கும் வல்லமை படைத்தது.

லிப்ஸ்டிக்  தோன்றிய வரலாறு தெரியுமா?

16-ம் நூற்றாண்டிலிருந்தே சிவப்பு வண்ண லிப்ஸ்டிக் பாப்புலர். முதலாம் எலிஸபெத் மகாராணிக்கு பளிச் ரெட் என்றால் படுமோகம். தாவரங்களிலிருந்தும் தேனிலிருந்தும் எடுத்து உதடுகளுக்குச் சாயம் பூசிக் கொண்டாராம். காஸ்மெடிக் போட்டால் மரணம் நெருங்காது என நம்பினார்களாம். 1700-களில் இங்கிலாந்தில் லிப்ஸ்டிக்குக்குத் தடை. திருமணத்துக்கு முன் போடவே கூடாது. ஆனால் அதிக வருடங்கள் இது செல்லுபடியாகவில்லை. 1800-ல் விக்டோரியா மகாராணிக்கும் லிப்ஸ்டிக் என்றால் நல்ல அபிப்பராயம் இல்லை. ஃபிரெஞ்சு நடிகை சாரா ரெட் லிப்ஸ்டிக் போட நாட்டில் ஏகக் கலாட்டாவாம். அமெரிக்காவில் 1890லிருந்து லிப்ஸ்டிக் விளம்பரம் ஆரம்பித்தது. 1900-20களில் முதன்முதலில் லிப்ஸ்டிக்கை மெட்டல் ட்யூபில் கொண்டு வந்தது மாரீஸ் லெவி என்கிற நிறுவனம். பிறகு சானல், மாக்ஸ் ஃபாக்டர், எலிஸபெத் ஆர்டன் என ஏகப்பட்ட நிறுவனங்கள்.

எப்படிப் போடணும்? சில டிப்ஸ் உங்க லிப்ஸுக்கு.

அப்படியே சிவப்பு கலரை அப்பக் கூடாது. பயங்கரமா இருக்கும். லிப் லைனர் வைத்து முதலில் அவுட்லைன் போட்டு பிறகே லிப்ஸ்டிக் போட வேண்டும்.

ரெட் லிப்ஸ்டிக் போட்டு ரெட் கலரில் நெயில் பாலீஷும் போடவே கூடாது. டூ மச் ரெட் கண்ணை உறுத்தவே செய்யும். மாட்ச் மாட்சா போடணும்னு சொல்லி 'சிவப்பு மல்லி'யாக இருக்காதீங்கம்மா.

மெல்லி உதடுகளாக இருந்தால் டீப்ரெட் போடாதீங்க. அடர்ந்த சிவப்பு வண்ணம் உதடுகள் மேலும் சிறிதாக்கிக் காண்பிக்கும்.

ரெட் லிப்ஸ்டிக் போட்டால் சிம்பிள் ஐ மேக்- இருக்கணும். கண்ணிலும் ஏகமா ஈஷிக்கொண்டு உதடுகளிலும் ரத்தச் சிவப்பை அப்பிக் கொண்டால் கேலிக்குள்ளாவீர்கள்.

மிக மிக ஜாக்கிரதையாகப் போட வேண்டும். மத்த லிப்ஸ்டிக் ஷேட்ஸை ஓடுகிற காரில், நகரும் லிஃப்டில் போடலாம். ஆனால் இது காஷுவலாகப் போடக் கூடியதல்ல.

பல்லில் படக்கூடாது. ட்ராகுலா போல் தெரிவீர்கள். எக்ஸஸ் லிப்ஸ்டிக் இருந்தால் டிஷ்யூவி னால் ஒற்றியெடுக்கவும்.

எந்த ட்ரஸ்ஸுடனும் ரெட் லிப்ஸ்டிக் ஜோரா செட் ஆயிடும். ப்ளாக் ட்ரஸ், ப்ளேஸர், சிம்பிள் ஜீன்ஸ் என எதனுடனும் பக்காவா ஜோடி சேரும்.

க்ரிம்ஸன், கோரல், ஃபூஷியா, ரெட் பிங்க், ஆரஞ்ச்ரெட் என ஷேட்கள் பலவிதம். மெபலீன், மாக், ரெவ்லான், லக்மே என ஏகப்பட்ட காஸ்மெடிக் கம்பெனிகள். தரமுள்ள லிப்ஸ்டிக் மட்டுமே போடவும்.

ஒரு ரெட் லிப்ஸ்டிக், மாட்சிங் ரெட் லிப் லைனர், லிப் ப்ரஷ், கன்ஸீலர் இதுவே தேவையானது. அளவுக்கதிகமான லிப்ஸ்டிக்கை ஒற்றியெடுக்கவே கன்ஸீலர்.

'மாட்' வேணுமா? 'க்ளாஸி' வேணுமா? (Matte or Glossy) என்பதை நீங்களேதான் முடிவு செய்யணும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com