முகப்பருவால் ஏற்பட்ட கறைகள், தழும்புகள் நீங்க - செலவில்லாத வழிகள்!

beauty tips
Get rid of scars - inexpensive ways!
Published on

முகப்பரு ஆண், பெண் இருபாலரிடமும், வளர் இளம் பருவத்தினரிடம் இருக்கும் பெரிய பிரச்னை. ஆயில் ஸ்கின் உள்ளவர்கள், தலையில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று உள்ளவர்களுக்கு பரு அதிகம் வரும். டிஸ்க்ரண்ட்டேஷன் தெரபி என்கிற சிகிச்சையின் மூலம் சருமத்தில் சுரக்கிற அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தலாம். மைக்ரோ டெர்மஸ்ரேஷன் மற்றும் மீசோ தெரபி என்கிற இரண்டு சிகிச்சைகளும் தழும்புகளை போக்குவதில் நல்ல பலன்களை தருகிறது.

தழும்புகளை போக்குவதில் உணவுக்கும் பெரும் பங்குண்டு. அதிக எண்ணெய் மற்றும் கார உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நெல்லிக்காய், கோஸ், தக்காளி, கேரட், சோயா, பால், முட்டை, வெண்ணெய், வாழைப்பழம், மாம்பழம், பேரிக்காய் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள பரு வருவது குறையும்.

தழும்புகளை தடுக்கும், போக்கும் எளிய வீட்டு வைத்தியமாக சில வழிகள் இதோ…

ருக்கள் ஏற்பட்ட தழும்புகள் உள்ள பகுதிகளில் ஆலிவ் எண்ணெயை தடவி இலேசான மசாஜ் செய்து வர பரு வருவது குறையும். தழும்புகளையும் குறைக்கும்.

ப்பாளி பழத்தை அரைத்த விழுது ஒரு டேபிள்ஸ்பூன், லேவண்டர் ஆயில் 2சொட்டு, பாதாம் எண்ணெய் 10சொட்டு, சிறிதளவு பன்னீர் ஆகியவற்றை கலந்து கொண்டு தழும்புகள் மீது தடவி பின் கழுவிட பரு தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

ரு கைப்பிடி வெந்தயக் கீரையை அரைத்து தழும்புகள் மீது தடவி பின் கழுவி வரை பருக்கள் வராததுடன் தழும்புகளையும் போக்கும்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்திற்கான உள்ளும் புறமும் ஆரோக்கியம் காக்கும் டிப்ஸ்!
beauty tips

மூன்று பாதாம் பருப்பு ஊறியதுடன் சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு1டீஸ்பூன் கலந்து பேஸ்ட் ஆக முகத்தில் தடவி பின் கழுவிவிட முகப்பரு, கரும்புள்ளிகள் மறைவதுடன் சருமமும் பளிச்சிடும்.

ருக்களுக்கும் தழும்புகளுக்கும் வெட்டிவேர் சிறந்த மருந்து. வெட்டி வேர், கொட்டை நீக்கிய கடுக்காய் எடுத்துக் கொண்டு முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் நன்றாக அரைத்து கொண்டு அதை பரு, தழும்புகள் மீது தடவிட்டு பின் கழுவி வர தழும்புகள் மறையத் தொடங்கும்.

வெட்டி வேர் ஊறிய தண்ணீரையும் முகம் கழுவ உபயோகிக்க சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

ஜாதிக்காய் பொடி சிறிது தேங்காய் பாலில் கலந்து முகத்தில் தடவி பின் கழுவிட பரு வருவது குறையும்.

ற்றாழை ஜெல்லை தடவி பின் கழுவிட பரு வராது. இரண்டு டீஸ்பூன் கசகசாவை ஊற வைத்து பின் மஞ்சள் தூள், கருவேப்பிலை பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி பின் கழுவிட முகம் பளபளப்பாக பளிச்சென்று இருக்கும்.

ந்தனத்துடன் தோல் நீக்காத உளுந்து பவுடர் சேர்த்து இதனுடன் பன்னீர் விட்டு கலந்து முகத்தில் தடவி பின் கழுவிட கருமை மறைந்து, பருக்கள் தழும்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
இயற்கை அழகின் ரகசியம்: பீட்ரூட் தரும் அற்புத 'பளிச்' சருமப் பொலிவு நன்மைகள்!
beauty tips

வைட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகள் தழும்புகளை தூரம் போகச்செய்யும். எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தக்காளி, வெள்ளரி துண்டுகள் முகத்திற்கு புத்துணர்வை தருகின்றன.

இவ்வாறு நம் சருமத்துக்கேற்ற முறையில் பொருட்களை பயன்படுத்தி முகப்பரு மற்றும் தழும்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

-மகாலெட்சுமி சுப்ரமணியன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com