'க்யூட் லுக்’ ஸ்கர்ட்!

'க்யூட் லுக்’ ஸ்கர்ட்!

வர் ஸ்டைல் ட்ரஸ் என்று ஒன்று இருந்தால், அது ஸ்கர்ட்தான்! ஒரு பெண் யங்கா, பப்ளியா, கலர் ஃபுல்லாகத் தெரிவது ஸ்கர்ட்டில்தான். அவசர அவசரமாக கிளம்பும்போது கைகொடுக்கும் ட்ரஸ். நிமிஷத்தில் ரெடியாகிடலாம். உங்கள் வார்ட்ரோபில் இருந்தே தீர வேண்டிய ஸ்கர்ட் ஸ்டைல்களைப் பார்க்கலாமா...

* பென்சில் ஸ்கர்ட்: ஃபிட்டிங்காக முழங்கால் வரை இருக்கும் பென்சில் ஸ்கர்ட் ஒரு ஸ்ட்ரெயிட் கட். கவ்விப்பிடித்தாற்போல் டைட்டாக இருக்கும். நடப்பது சற்று சிரமமாகக் கூட சிலருக்குத் தெரியலாம். ஃபார்மல் உடையாகக் கருதப்படுவது பென்சில் ஸ்கர்ட்.

* ஏ-லைன் ஸ்கர்ட்: இடுப்பு குறுகலாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும். இந்த காஷிவல் ஸ்கர்டை முழங்கால் வரை, கணுக்கால் வரை அல்லது புரள புரளக் கூட போடலாம். ஆங்கில எழுத்து ‘ஏ’ போல இருப்பதால் இந்தத் திருநாமம்.

* மிடி ஸ்கர்ட் : பழங்காலத்து ஸ்டைல்கள் திரும்பவும் படை எடுக்கின்றன. ரெட்ரோ ஸ்டைல் என்று சொல்லி பெண்கள் மறுபடியும் மிடி ஸ்கர்ட்டுடன் வேகமாக நாகரிக ராணியாக பவனி வருகிறார்கள். மிடி ஸ்கர்ட் மேலே எதை வேண்டுமானாலும் போடுவது ஒரு கூடுதல் வசதி. கிளாஸிக் லுக் தரும் இந்த மிடி ஸ்கர்ட்.

* லெதர் ஸ்கர்ட் : ‘லெதர் போக் கூடாது. அனிமல் பாவம். மேனகா காந்தி கோவிச்சுக்குவாங்க...’ன்னு யோசிக்கிற மென்மையான கேர்ளா? ஃபேக் லெதர் அதான் போலியான லெதர் ஸ்கர்ட் அணியலாம். ஜாலி ஈவன்ட், கெட் டு கெதர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற உடை.

* ப்ரூம்ஸ்டிக் ஸ்கர்ட் : தொங்கத் தொங்க கணுக்கால் வரை போடும் ஸ்கர்ட். இது துணியிலேயே சுருக்கம் சுருக்கமாக எபெக்ட் கொடுத்துத் தைக்கப்படும். ரிங்கிள் ஸ்கர்ட்டான இதை பெண்கள் விரும்பி அணிகிறார்கள்.

“ஸ்கர்ட் ஸ்கர்ட்தான் போடறா, எங்க ஹார்ட் பீட்டைத்தான் ஏத்தறா” ன்னு பாட்டுக் கேட்டு கொண்டே சில ஸ்கர்ட் ரூல்ஸை ஃபாலோ பண்ணிடுங்கம்மா ஸ்வீட் சுந்தரிகளா...

* ஸ்கர்ட் வாங்கும்போது, தைக்கும் போது என்ன ஃபேப்ரிக், மெட்டிரியல் என்று பார்க்கவும். காட்டன், டெனிம், சில்க், பாலியெஸ்டர்... என வெரைட்டி ஏராளம்.

* பிளெயின், ஃப்ளோரல் டிஸைன், செக், ஸ்ட்ரைப்ஸ், போல்கா என ஏகப்பட்ட டிசைன்ஸ்.

* ஸ்டாகின்ஸ் மற்றும் லெகிங்ஸ் வாங்கி, மினி ஸ்கர்ட் போட்டால், பின்னாடி மம்மி கிட்டேர்ந்து நோ திட்டல்.

* ஹை ஹீல்ஸ், ஃப்ளிப் ஃப்ளாப்ஸ், ஸ்னீக் கர்ஸ்... என காலணிகள் தேவை.

* பான்ட் போடுவதில் செளகர்யம் அதிகம்தான். பான்டை விட பெண்மையை அதிகமாக்கும் ட்ரஸ் ஸ்கர்ட்தான் ஃபாஷன் பண்ணுங்க பத்திரமா இருங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com