அதிகமா சன் ஸ்கிரீன் பயன்படுத்துறீங்களா? போச்சு!

Dangers of using too much sunscreen.
Dangers of using too much sunscreen!
Published on

சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்க சன் ஸ்கிரீன் ஒரு பிரதான பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதை அதிகம் பயன்படுத்துவதால் சில பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பதிவில் அதிகமாக சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதால் ஏற்படும் சில முக்கியமான பிரச்சனைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

அதிகமாக சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்: 

சில சன் ஸ்கிரீன்களில் உள்ள ரசாயனங்கள் ஹார்மோன்களை பாதிக்கக் கூடியவை. அதிகமாக பயன்படுத்தும்போது ஈஸ்ட்ரோஜன், மற்றும் ஆண்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களின் சமநிலையை பாதிக்கக்கூடும். இது மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள், கருவுறுதல் பிரச்சனைகள் மற்றும் பிற ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

சிலருக்கு சன் ஸ்கிரீனில் உள்ள பொருட்கள் ஒவாமையை ஏற்படுத்தலாம். இது தோல் எரிச்சல், சிவந்து போதல், அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். 

சன் ஸ்கிரீன் சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து முகப்பருக்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. மேலும், இது மற்ற சரும பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். 

சூரிய ஒளி விட்டமின் டி உற்பத்திக்கு மிகவும் அவசியம். அதிகமாக சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதால் சூரிய ஒளியிலிருந்து நம் உடல் விட்டமின் டி உறிஞ்சுவது தடுக்கப்படுகிறது. இது நம் உடலில் விட்டமின் டி குறைபாட்டுக்கு வழி வகுத்து பல உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். 

இதையும் படியுங்கள்:
சூரிய ஒளி கடிகாரம் அமைந்த அபூர்வ திருக்கோயில் தெரியுமா?
Dangers of using too much sunscreen.

சன் ஸ்கிரீனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? 

SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF அளவு கொண்ட சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது நல்லது. வெளியே செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன் சன் ஸ்கிரீனை தடவுங்கள். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். உதடுகள் மற்றும் கண்களுக்கு, அதற்காகவே தனியாக இருக்கும் சன் ஸ்கிரீனை பயன்படுத்தவும். இயற்கை மூலப்பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட சன் ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். 

சூரிய ஒளியில் இருந்து நம் சருமத்தை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம். அதே நேரத்தில் சன் ஸ்கிரினால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் சரும வகை மற்றும் தேவைகளுக்கு ஏற்ற சரியான சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது முக்கியம். மேலும், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சன் ஸ்கிரீனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் சருமத்திற்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com