கண் கருவளையம்: நிரந்தரமாக நீக்க எளிய வீட்டு வைத்தியங்கள்!

Beauty tips in tamil
Get rid of dark circles under the eyes
Published on

தூக்கமின்மை, அனீமியா,பாரம்பரியம், கண்களுக்கு அதிக வேலைப்பளு,டென்ஷன் போன்ற பல காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகிறது.இதற்கு நம் சில பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம்.செல் போன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம். நீண்ட நேரம் கம்ப்யூட்டர், லாப்டாப் உபயோகிப்பதை தவிர்க்க கருவளையம் ஏற்படாது.

ணவு பழக்கங்களில் இரும்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, பீட்ரூட்ஜுஸ், கீரை வகைகள், பப்பாளி, மாம்பழம் போன்றவற்றை ரெகுலராக சாப்பிட உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு கண் கருவளையம் வருவது இருக்காது.

விட்டமின் ஏ, விட்டமின் கேப்சூல்களில் உள்ள எண்ணையை கண்களைச் சுற்றி தடவி பத்து நிமிடம் கழித்து பஞ்சினால் துடைக்கவும்.

பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், உப்பு கலக்காத வெண்ணெய் இவற்றை தலா 1/2டீஸ்பூன் எடுத்து கண்களின் உள்ளே படாதவாறு வெளிப்புற மாகமெதுவாக மசாஜ் செய்து வந்தால் கண்கருவளையம் மாறும்.

ற்றாழையின் சோற்றுப்பகுதியை பன்னீர் உடன் கலந்து கண்களுக்கு அடியில் தடவி 15நிமிடம் கழித்து கழுவவும்.

புரோட்டீன் பவுடர்அல்லது ஸ்கிம்ட் மில்க் பவுடர் 2டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் குழைத்து கருவளையத்தில் தடவி சிறிது நேரத்தில் கழுவலாம்.

முட்டை வெள்ளை கருவைக் கண்களின் அடியில் தடவி பத்து நிமிடத்தில் குளிர்ந்த நீரில் கழுவலாம்.கண்களுக்கு கீழே பை போல இருந்தால் 2டீஸ்பூன் சோயா பவுடருடன் ,2டீஸ்பூன் தண்ணீர் கலந்து தடவி பின் கழுவி வர வீக்கம் குறையும்.

இதையும் படியுங்கள்:
ஹை ஹீல்ஸ் முதல் ஹேண்ட்பேக் வரை: பெண்கள் பயன்படுத்தும் பொருட்களின் ஆச்சரிய வரலாறு!
Beauty tips in tamil

பார்வை குறைபாடு இருந்தால் கருவளையம் வர வாய்ப்பு உள்ளது. கண் பரிசோதனை செய்துகொள்ள குறை இருந்தால் கண்ணாடி போட குறைகள் மாறும்.

ண்களை ஒரே மாதிரியான நிலையில் பார்த்து கொண்டிருக்காமல் அவ்வப்போது கண்களை சிமிட்டும் போதும்,கண்ணை குளிர்ச்சியாக வைப்பதன் மூலமும் கண் கருவளையத்தை தவிர்க்கலாம்.

திகாலை சூரிய வெளிச்சம்,சூரிய நமஸ்காரம் போன்றவை கண்ணுக்கு புத்துணர்ச்சி தரும் . வைட்டமின் டி கிடைப்பதால் கண் நோய்கள் வராது.

ண்ணுக்கு தேவையான ஓய்வும், சத்துக்கள் கிடைத்தாலே கண் குறைபாடுகள் இன்றி நம்மை காக்கும்.

தேவையெனில் தோல் மருத்துவரோ கண் மருத்துவரோபரிந்துரைக்கும் ஐ க்ரீம்கள் உபயோகிக்க கண் கருவளையம் மறைந்து முகம் பளிச்சிடும்.

ரமான பியூட்டி பார்லரில் செய்யப்படும் பேஷியல் உம் கண் கருவளையத்தைப் போக்கி முகத்தை க்ளோவாக ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

- மகாலெட்சுமி சுப்ரமணியம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com