ஒருவருக்கு அதிக மெலனின் உற்பத்தி காரணமாக ஹைப்பர் பிக்மென்டேஷன் ஏற்படும். இந்த ஹைப்பர் பிக்மென்டேஷன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அல்லது பரவலாக காணப்படும். முகப்பரு அல்லது காயங்கள் ஏற்பட்ட பிறகு அந்த இடத்தில் கருமையாக மாறிவிடும். இதற்கு அதிகப்படியான மெலனின் உற்பத்தி காரணமாகும்.
இந்த மெலனின், உடலில் சருமம், முடி, கண் போன்ற இடங்களில் நிறம் உருவாவதற்கு முக்கிய நிறமியாக செயல்படுகிறது. சூரியனில் இருந்து வரும் புற ஊதா ஒளி உடலில் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இந்நிலையில் ஒரு சிலர் பார்ப்பதற்கு கலராக இருந்தாலும், அவர்களின் கை விரல் மூட்டுகள் அதிக கருப்பு நிறத்தில் காணப்படும். நாம் இந்த பதிவில் வீட்டு வைத்தியத்தின் மூலம் கை விரல் மூட்டுகளில் உள்ள கருமை நிறத்தை எவ்வாறு நீக்கலாம் என காணலாம்.
கருமை நிறத்தை நீக்க வீட்டு வைத்தியம்:
புளித்த தயிர் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை நன்றாக அரைத்து அதை கைவிரல் மூட்டுகளில் அப்ளை செய்து நன்றாக தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
எலுமிச்சை மற்றும் சர்க்கரை பாதி வெட்டிய எலுமிச்சை பழத்தின் மீது சர்க்கரை சேர்த்து அதை கருமை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் கருமை நீங்கி விடும்.
தக்காளி மற்றும் சர்க்கரை பாதி வெட்டிய தக்காளி பழத்தின் மீது சர்க்கரை சேர்த்து கருமை உள்ள மூட்டுகளில் ஸ்க்ரப் செய்து வந்தால் கருமை நீங்கி விடும்.
மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் இவை இரண்டும் புற ஊதா ஒளியால் ஏற்படக்கூடிய கருமையை தடுக்கிறது. வெளியில் செல்லும் போது கைகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். இதனால் கை விரல் மூட்டுகளில் கருமை ஏற்படுவது தடுக்கப்படும்.
பேக்கிங் சோடாவுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தினமும் விரல் மூட்டுகளில் தேய்த்து வந்தால் கருமை நிறம் மாறும்.
மஞ்சளில் உள்ள குர்குமின் சேர்மம் கருமை நிறத்தை போக்கும். இந்த குர்மின் டைரோசினேஸ் உடன் வினைப்புரிந்து கருமை நிறம் ஏற்படுவதை தடுக்கிறது.
கற்றாலை ஜெல் தினமும் கைவிரல் மூட்டுகளில் தேய்த்து மசாஜ் செய்வதால், கருமை நிறம் மாறும்.
உருளைக்கிழங்கு இதில் உள்ள கேடகோலேஸ் மற்றும் கோஜிக் அமிலம் மெலனின் உற்பத்தியை குறைக்கிறது. கருமை நிறம் உள்ள இடங்களில் உருளைக்கிழங்கு சாறு தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கருமை நிறம் மாறும்.
கடலை மாவு மற்றும் காஃபி பவுடர் இரண்டும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு சிறிது நீர் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த பேஸ்ட்டை கருமை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் விரைவில் கருமை நிறம் மறையும்.
வைட்டமின் C உள்ள சன்ஸ்கிரீன் அல்லது சீரம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
வைட்டமின் C சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். எனவே இது தோலில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.
பழங்களில் அதிக அளவு வைட்டமின் C இருப்பதால் உணவாகவும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஹைப்பர் பிக்மென்டேஷன் ஏற்படுவது குறையும்.
ஒருவருக்கு வைட்டமின் B12 குறைபாடு இருந்தாலும் ஹைப்பர் பிக்மென்டேஷன் ஏற்படும்.