சரும பொலிவு
சரும பொலிவு

முகத்தில் கரும்புள்ளிகள் மறைய சருமம் பொலிவு பெற!

காய்ச்சாத பாலை எடுத்துக்கொண்டு அதை பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்தால் சருமத்தில் அழுக்குகள் வெளியேறும். பாலில் உள்ள லாக்டோ அமிலம் சருமத்திற்கு மிகவும் நல்ல பலனை தரும். ஐந்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் பளிச் முகத்தை பெறலாம்...

கற்றாழையை நன்றாக கழுவி  பெரிய துண்டுகளாக வெட்டி பிரிஸரில் போட்டு வைத்துக்கொண்டால் இறுகிவிடும். அதில் ஒரு துண்டை எடுத்து முகத்தில் ஐந்து நிமிடம் தடவி மசாஜ் செய்து வர முகம் புத்துணர்ச்சி பெறும்.

கரும்புள்ளிகள்
கரும்புள்ளிகள்



அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் பச்சரிசி மாவு ஒரு டீஸ்பூன் மைதா மாவு இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கலக்கவும் . நன்றாக பழுத்த தக்காளியை மிக்ஸியில் அரைத்து சேர்க்கலாம். இதனோடு தயிர் ஒரு ஸ்பூன் கலந்து கொள்ளலாம். ஒரு முழு எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளவும். இவையனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

முகத்தை கழுவி துடைத்து இந்த பேக்கை போட்டு இருபது நிமிடம் கழித்து கழுவினால் பொலிவான சருமம் பெறலாம். வாரம் ஒருமுறை இதனை பயன்படுத்தினால் கரும்புள்ளிகள் மறைவதோடு முகச்சுருக்கங்கள் மறைந்து " பளிச் " முகத்தை பெறலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com