சரும வறட்சியை தடுக்க வீட்டில் உள்ள பொருட்களிலேயே தீர்வுகள் இருக்கு தெரியுமா?

beauty care...
beauty care...

ருமம் வறண்டு பலருக்கு பிரச்னையாக இருக்கும். இதைப் பலர் பெரிய விஷயமாக நினைப்பதில்லை. இது பல சரும நோய்களுக்கு  அச்சாரம் கொடுத்துவிடும்.

குறிப்பாக பலருக்கு முகப்பரு, கருமை வர சருமம் வறண்டு போவதே காரணம். இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காணலாம்.

பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை தூண்டி சருமத்தை ஈரப்பதத்தோடு இருக்கச் செய்யும். இதற்கு பால் ஒரு டீஸ்பூன், பால் காய்ச்சிய க்ரீம் இரண்டு டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு துளி மூன்றையும் கலந்து கை, கால், முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் சருமம், முகம் வறட்சி நீங்கும்.

4 டீஸ்பூன் பால். பன்னீர் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு சில துளிகள் கலந்து சருமத்தில் பூசி சிறிது நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில்  குளித்தால்  சரும வறட்சியை போக்கும்.

இரண்டு டீஸ்பூன் தேன், சில துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்து  பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளித்தால் சரும வறட்சியை தடுக்கும். தேனில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தில் உள்ள செல்களை சேதமடைவதைத் தடுக்கின்றன.

விளக்கெண்ணெயை குளிப்பதற்கு முன் பத்து நிமிடம் உடம்பு முழுவதும் ஊறவைத்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்து வர பருக்கள், வெயிலால்  ஏற்படும் கருமை, தழும்புகள் என  அனைத்து விதமான சரும வறட்சியும் போகும்.

ஆலிவ் ஆயில் சரும சுருக்கம் வறட்சியை தடுக்கும் வைட்டமின் ஈ இதில் உள்ளது.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஏ  வைட்டமின்களும் உள்ளன. பழுப்பு சர்க்கரை ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில் சிறிது சேர்த்து பசைபோல ஆக்கி முகம், கை, கால்களில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வர சரும வறட்சி ஏற்படாது.

சருமத்தில் இயற்கையான எண்ணெய் சுரக்கும் துவாரங்களை இறந்து போன செல்கள் மூடியிருக்கும். அதைப் போக்குவதற்கு இரவு தூங்கப்போகும் முன்பாக தேங்காய் எண்ணெயை தடவி, மறுநாள் காலை குளித்தால் சருமம் பளபளப்பாகும்.

புளித்த தயிரை உடல் முழுக்க பத்து நிமிடங்கள் ஊறவைத்து, பின் குளித்தால் சருமம் ஈரப்பசையோடு இருக்கும். இதில் இருக்கும் கால்சியம், வைட்டமின்கள், லாக்டிக் அமிலம் சருமத்தில் வறட்சியை நீக்கி மென்மை, பளபளப்பு, மினு மினுப்பை தயிர் தருகிறது.

இதையும் படியுங்கள்:
நாம் எந்தக் கட்சி? கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்!
beauty care...

வாழைப்பழத்தை கூழாக்கி, சிறிது தேன் கலந்து முகம் கை, கால்களில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்துள்ளதால் சருமத்திற்கு நல்ல ஈ,ரப்பசை கிடைக்கும்.

பாதாம் எண்ணெயில் வைட்டமின ஈ உள்ளதால் வறண்ட சருமத்துக்கு தேவையான ஈரப்பசையை தரும் ஆற்றல் உள்ளதால், இதனையும் உடலில் பூசி குளித்தால் சரியாகும். பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

இதில் உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வந்தால் சரும வறட்சி நீங்கும். சருமம் பொலிவுடன் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com