Facial massage
Facial massageImg Credit: Antoine

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபேஷியல் மசாஜ் தேவையா? அதை செய்தாலும் பலன் கிடைக்குமா?

தொகுப்பு:  ஆர். ஐஸ்வர்யா

‘நாம் வாழும் சமுதாயத்தில் சில வரைமுறைகள் இருக்கின்றன. வயதானவர்கள் என்றால் அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு எதிர்பார்ப்பும் கட்டுப்பாடுகளும் உண்டு. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நன்றாக டிரஸ் செய்துகொண்டாலும் அல்லது மேக்கப் செய்துகொண்டாலும் அதை பிறர் கேலியாக பார்க்கும் மனோபாவம் இங்கே இருக்கிறது. அதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அழகு நிலையம் சென்று ஃபேஷியல் செய்துகொண்டாலும் அதை வெளியில் தைரியமாக சொல்வது இல்லை. ‘இந்த வயசுக்கு மேல இதெல்லாம் தேவையா?’ என்பது போன்ற கேலிப்பேச்சுகளை எதிர்கொள்ள கூடுமோ என்று தயக்கம் மற்றும் பயமே காரணம். மேலும்  அப்படியே ஃபேஷியல் செய்துகொண்டாலும் அது பலன் தருமா என்ற சந்தேகமும் எழும். இதுபோன்ற சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

Beautician Vasundhara
Beautician Vasundhara
Q

60 வயதிற்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு ஃபேஷியல் மசாஜ் தேவையா? செய்தாலும் பலன் கிடைக்குமா?

A

ஃபேஷியல் மசாஜ் செய்துகொள்வதினால் நிறைய பலன்கள் உண்டு, குறிப்பாக சீனியர் சிட்டிசன்களுக்கு. பொதுவாக வயதாகும்போது செல்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படாது. ரத்த ஓட்டம் குறையத் தொடங்கும். அது முகத்தில் உள்ள செல்களில் சீராகப் பரவாது. ஆனால், ஃபேஷியல் மசாஜ் செய்யும்போது உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் ரத்த ஓட்டம் சீராகப் பரவ உதவியாக இருக்கும்.

Visible difference
Visible difference
Q

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபேஷியல் மசாஜ் தரும்போது அவர்கள் எப்படி உணர்வார்கள்?

A

வயதாகும்போது இந்த நிணநீர் (lymph) செயல்பாடு குறையும். ஒரு இடத்தில் அதிகமாகவும் இன்னொரு இடத்தில் குறைவாகவும் இருக்கும்.

ஃபேஷியல் மசாஜ் செய்யும்போது நிணநீர் முகம் முழுக்க சரியாக பரவும். மிகவும் ரிலாக்ஸாக உணர்வார்கள். அவர்களுடைய மசில் டோன் நன்றாக இருக்கும். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, பள்ளத்தை நோக்கி நீர் பாய்வதுபோல நமது உடலில் உள்ள நிணநீர் (lymph) அதிகமாக உள்ள இடத்தில் இருந்து குறைவாக உள்ள இடத்திற்கு நகரும்.  

Q

வயதாகும்போது முகத்தில் என்னென்ன மாறுபாடுகள் ஏற்படுகின்றன?  அதை வயதானவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

A

தோலுக்கு அடியில் உள்ள கொலாஜன் எலாஸ்டின் என்கிற புரதம், வயதாகும்போது சுருங்கும். கொழுகொழு என்று இருந்த கன்னங்கள் வயதாகும்போது ஒட்டிப்போய் கண்கள் உள்ளே போய்விடும். வயதானவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பேஷியல் மசாஜ் செய்யும்போது அது கொலாஜனை பூஸ்ட் செய்து ஒட்டிப்போன கன்னத்தைச் சரி செய்யும்.

மேலும், வயதாகும்போது உடலில், முகத்தில் சுருக்கங்கள் உண்டாகின்றன. டபுள் சின் எனப்படும் இரட்டை தாடை உருவாகும். கன்னங்களின் இருபுறமும், மூக்கின் இருபுறமும் கன்னங்களில் வளைவுகள், கோடுகள் தோன்றும். கண்ணுக்கடியில் வீங்கியது போன்ற தோற்றமளிக்கும். கண் ஓரங்களில் சுருக்கம் ஏற்படும்.

ஃபேஷியல் மசாஜ் செய்யும்போது இந்தக் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். இரட்டைத்தாடை தடுக்கப்படும். கண்களுக்கு அடியில் இருக்கும் சுருக்கம், மூக்கு ஓரத்தில் இருக்கும் வளைவுகளும் கோடுகளும் அவ்வளவாகத் தெரியாது. ஒருமுறை ஃபேஷியல் செய்துகொண்டால் 10, 15 நாட்கள் புத்துணர்ச்சியோடு உணர்வார்கள்.

Old people
Old people
Q

ஃபேஷியல் மசாஜ் செய்வதால் வயதாகும்போது ஏற்படும் சுருக்கங்களை மறைக்க முடியுமா?

A

நிச்சயமாக முடியும். வழக்கமாக ஃபேஷியல் செய்துகொள்பவர்களுக்கும் ஃபேஷியல் செய்யாதவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு நன்றாக தெரியும். ரெகுலராக ஃபேஷியல் மசாஜ் செய்துகொள்ளும் பெரியவர்களுக்கு முகத்தில் கோடுகள், சுருக்கங்கள் கம்மியாக இருக்கும். கன்னத்து தசைகள் தொங்கிப் போகாமல் டைட்டாக இருக்கும்.

Q

ஃபேஷியல் மசாஜ் செய்துகொண்டால் ‘ஸ்ட்ரெஸ்’ குறையுமா?

A

மசாஜ் செய்துகொள்ளும்போது டென்ஷன் நன்றாகக் குறையும். ஸ்ட்ரெஸ் ரிலீஃப் ஆகும். மசாஜ் செய்ய செய்ய தூங்கியே விடுவார்கள். அதனால் நன்றாக ரிலாக்ஸாக பீல் செய்வார்கள். அவர்கள் முகமும் அகமும் புத்துணர்ச்சியோடு விளங்குவது நிச்சயம்.

Q

வீட்டில் தானாக மசாஜ் செய்துகொள்வது எப்படி? 

A

பார்லருக்கு போய் ஸ்பெஷல் மசாஜ் செய்துகொள்ள முடியாத சீனியர்கள் வீட்டிலேயே மசாஜ் செய்துகொள்ளலாம். முதலில் முகத்தை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். ஏதாவது கிரீம் அல்லது ஆயில் எடுத்துக் கொள்ள வேண்டும். நுனி விரல்களில் கிரீமை தடவிக்கொள்ளவும். முதலில் கழுத்துக்குக் கீழ் இருந்து தாடை வரை மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். கழுத்தின் இருபுறங்களிலும் நடுவிலும் மசாஜ் செய்து தாடையில் கொண்டு வந்து முடிக்கவும். இதுபோல 20லிருந்து 30 முறை செய்ய வேண்டும். 

அடுத்து தாடையில் ஆரம்பித்து காதுகளில் முடிக்கவேண்டும். இதையும் இருபதிலிருந்து முப்பது முறை செய்ய வேண்டும் மெதுவாக மேல்நோக்கிய பொசிஷனில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

அடுத்து வாய் ஓரங்களில் ஆரம்பித்து நெற்றிப்பொட்டு வரை மசாஜ் செய்ய வேண்டும். கைவிரல்களை மடக்கி வட்ட வடிவமாக மேல்நோக்கிய பொசிஷனல் வாய் ஓரங்களில் ஆரம்பித்து நெற்றி பொட்டில் சென்று முடிக்க வேண்டும். முடிக்கும்போது அங்கே அழுத்தம் கொடுக்க வேண்டும். 

அடுத்து வாயைச் சுற்றிலும் மசாஜ் செய்ய வேண்டும். வாயின் அடிப்பகுதியில் ஆரம்பித்து மேல் உதடு வரை செய்ய வேண்டும். இருபதிலிருந்து 30 முறை செய்ய வேண்டும்.

மூக்கின் ஓரங்களில் மேல் நோக்கி செய்ய வேண்டும் லாஃபிங் லைன் எனப்படும் பகுதியிலும் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். 

கண்களைச் சுற்றிலும் மசாஜ் செய்ய வேண்டும். இந்த இடத்தில் மசாஜ் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மிகவும் மென்மையாக செய்ய வேண்டும். அதிகப்படியாக உள்ள நீர் அந்த இடத்தை விட்டு அகலும். குழிக்குள் விட்டு இருப்பதுபோல இல்லாமல் கண்கள் பளிச்சென்று பார்வைக்குத் தெரியும். கண்ணோரத்தில் உள்ள சுருக்கங்களும் மறையும். நெற்றியில் மேல் நோக்கி நடுவிலும் இருபுறமும் செய்யவேண்டும் நெற்றி பொட்டில் முடிக்க வேண்டும். அங்கு நன்றாக அழுத்தம் கொடுக்க  வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சரும பராமரிப்புக்கு நேரமில்லையா? கவலையை விடுங்க... இந்த 10 மட்டும் செய்யுங்க!
Facial massage
Q

மசாஜ் செய்த பின் என்ன செய்ய வேண்டும்?

A

மசாஜ் செய்து முடித்ததும் முகத்திற்கு ஆவி பிடிக்க வேண்டும். அதன் பின்பு முகத்தை துடைத்துக்கொண்டு ஏதாவது ஃபேஸ் மாஸ்க் அப்ளை செய்ய வேண்டும்.

Face Pack
Face Pack
Q

பேஸ் மாஸ்க் எப்படி தயாரிப்பது?

A

முல்தானி மட்டியில் வெள்ளரிக்காய் சாறு அல்லது கிளிசரின் அல்லது ரோஸ் வாட்டர் இதில் ஏதாவது ஒன்றை சிறிது அளவு கலந்து தயாரித்துக் கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். இப்போது முகத்தை கழுவினால் பார்க்க பளிச்சென்று இருக்கும். 

வீட்டில்செய்துகொள்ளமுடியாதவர்கள்பார்லரில்சென்றுபேஷியல்மசாஜ்செய்துகொள்ளலாம். 

Q

சீனியர் சிட்டிசன்களுக்காக தனிப்பட்ட பேசியல் மசாஜ்கள் உள்ளனவா?

A

ஆமாம் தற்போது 60 பிளஸ்இல் இருப்பவர்களுக்காகவே ஸ்பெஷலான பேசியல் மசாஜ்கள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

 ஹைட்ரா ஃபேஷியல், வயதான தோற்றத்தை தடுக்கும் ஆன்ட்டி ஏஜிங் ஃபேஷியல், டிரை ஃப்ரூட் ஃபேஷியல் , ஃப்ரூட் ஃபேஷியல் மற்றும் சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு ஃப்ளவர் ஃபேஷியல் எல்லாம் இருக்கிறது.

 பார்லருக்கு செல்லும்போது தங்களுடைய ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதை அழகுக் கலை நிபுணர்களிடம் கூறுவது அவசியம். அதற்கு ஏற்றவாறு அவர்கள் மசாஜ் செய்து விடுவார்கள். 

சீனியர் சிட்டிசன்கள் வயதைப் பற்றி கவலைப்படாமல் அழகாக மசாஜ் செய்து இளமையாகவும் அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com