பாதங்களை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள இப்படி செய்து பாருங்களேன்!

பாதம் பராமரிப்பு...
பாதம் பராமரிப்பு...pixabay.com

மது உடலிலேயே அதிகம் கண்டுக்கொள்ளப்படாத பகுதி என்றால் அது பாதமேயாகும். பாதத்தை அழகுப்படுத்தவும் அக்கறை காட்டவும் நாம் குறைந்த நேரத்தையே எடுத்துக்கொள்கிறோம். எனினும் நமக்காக அதிகமாக உழைப்பது பாதங்களேயாகும். அதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

குளித்து முடித்த உடன் கால்கள் முதல் பாதம் வரை தேங்காய் எண்ணையை தடவ வேண்டும். இதனால் கால்கள் ஈரப்பதத்துடன் இருக்கும்.

பாதங்களில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு பாத ஸ்க்ரப்களை பயன்படுத்தவும். இதை வைத்து பாதத்தில் மிருதுவாக தேய்ப்பதன் மூலம் இறந்த செல்கள் நீங்கும்.

தேங்காய் எண்ணையுடன் உப்பு சிறிது சேர்த்து பாதங்களில் ஸ்க்ரப் செய்யலாம். இது ஒரு சிறந்த எக்ஸ்பாலியேட்டராக செயல்படும்.

மிதமான சுடுதண்ணீரில் உப்பு சேர்த்து பாதங்களை 10 நிமிடங்கள் வைப்பது நல்லது. பாதங்களில் இருக்கும் கிருமிகளை அழிக்கும், அழுக்கையும் நீக்கும்.

பாதங்களை தினமும் எக்ஸ்பாலியேட் செய்வது அவசியமில்லை. வாரத்திற்கு ஒரு முறை செய்வதே போதுமானதாகும்.

பாதங்களில் இருக்கும் நகங்களை நாம் அவ்வப்போது கவனிப்பது கிடையாது. கால்களில் இருக்கும் நகங்களை சீராக வெட்டி வைத்து கொள்வது நல்லது. இல்லையேல் அழுக்கு சேர்ந்து விடும் வாய்ப்புகள் உள்ளது.

வெளியிலே சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது கால்களை சுத்தமாக கழுவுவதை வழக்கமாக வைத்து கொள்ள வேண்டும். அதுவே சுகாதாரமாகும்.

பாதம் பராமரிப்பு...
பாதம் பராமரிப்பு...

ழுமிச்சை பழத்தை வைத்து கால்களை நன்றாக தேய்ப்பது நல்லது. கால்கள் சுத்தமாகவும் பளபளப்பாகவும் மாறும்.

ருதாணியை அரைத்து பாதங்களில் தடவுவது நல்லது. பாதத்தில் வரும் பிரச்சனைகள் நீங்கும். நல்ல கிருமி நாசினியாகும்.

க்கரையையும் உப்பையும் சம அளவில் எடுத்து அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து பாதங்களில் தடவி 5 நிமிடம் ஸ்க்ரப் செய்யவும். இதனால் பாதங்கள் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

பார்லரில் செய்யப்படும் பெடிக்யூர் போன்றவற்றை பாதங்களுக்கு செய்து கொள்ளுங்கள். பாதங்களை மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
சுய சந்தேகத்திலிருந்து வெளியேறுவது எப்படி?
பாதம் பராமரிப்பு...

பாதங்களில் பெட்ரோலியம் ஜெல்லியை பயன் படுத்துவதால் பாத வெடிப்பு குறைந்து பாதம் மிருதுவாகும்.

ந்தையில் பாதங்களுக்கு பயன்படுத்த கூடிய கிரீம்கள் உள்ளன. இதை தடவுவதால் கால்களை மாய்ஸ்டரைஸராகவும் ஈரப்பதத்துடனும் வைத்து கொள்ள உதவும்.

ம்முடைய பாதங்களை நாம்தான் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பார்த்து கொள்ள வேண்டும். அது நமக்கு புத்துணர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com