நியாசினமைடின் நன்மைகள் பற்றி தெரியுமா?

Do you know about the benefits of niacinamide?
Do you know about the benefits of niacinamide?tamil.abplive.com

மீப காலமாகவே நியாசினமைட் அழகு சாதன துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது சருமத்திற்கு உகந்ததாகவும் எல்லா சரும பிரச்சனைக்கும் அருமருந்தாகவும் உள்ளது. இது சுற்றுசூழலால் ஏற்படும் மாசுவிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது மட்டுமில்லாமல் ஆரோக்கியமான சருமத்திற்கான புரதத்தையும் உற்பத்தி செய்கிறது. நியாசினமைட் விட்டமின் பி3 இன் ஒரு வகையாகும்.

நியாசினமைட்டின் நன்மைகள்:

·சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஆற்றல் உடையது.

 ·சருமத்தில் உள்ள போர்ஸ்களை வெகுவாகவே குறைக்கும்.

 ·முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும்.

 ·சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் பிக்மென்டேஷனையும் வெகுவாக குறைக்கும்.

நியாசினமைட்டை தினமும் சருமத்தில் பயன் படுத்தலாம். காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகள் தினமும் பயன்படுத்துவதால் பிக்மென்டேஷன் குறைந்து சருமம் பளபளப்பாக மாறுவதைக் கண்கூடாக காணலாம்.

ஆரம்பகட்டத்தில் 2-5% கொண்ட குறைந்த கான்சென்ட்டிரேஷனில் நியாசினமைடை பயன் படுத்தலாம். போக போக 10% கான்சென்டிரேஷனில் பயன்படுத்தலாம்.

ஆரோக்கிய உணவுகள்...
ஆரோக்கிய உணவுகள்...

சென்சிட்டிவ்வான சருமம் உள்ளவர்கள் நியாசினமைட்டை பயன்படுத்துவதால்,  சருமத்தில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

நியாசினமைட் இருக்கும் உணவுகள், மீன், முட்டை,கறி, பச்சை காய்கறிகள், மற்றும் தானியங்களாகும்.

இதையும் படியுங்கள்:
தீக்காய தழும்புகளை இயற்கையாக நீக்கும் முறைகள்! 
Do you know about the benefits of niacinamide?

நியாசினமைட்டை முடி பிரச்சனைக்கும் பயன் படுத்தலாம். குறிப்பாக முடிக்கொட்டும் பிரச்சனை யிலிருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவதால் முடி வலுப்பெறுவதோடு மட்டுமில்லாமல் முடி உடையாமல் பாதுகாக்கப்படுகிறது.

நியாசினமைட் சோப்பாகவும், க்ரீமாகவும் சீரமாகவும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நியாசினமைட் அதிகப்படியான மக்களின் சருமத்தில் நன்றாகவே செயல்படுவதால் இது மக்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அழகு தயாரிப்பு பொருட்களில் முதன்மையான இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com