சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது உடல் எடையைக் குறைக்கும் என நமக்குத் தெரியும், ஆனால் சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியுமா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்.
பெண்களின் முக பொலிவிற்கு சியா விதை பேஸ்மாஸ்க் ஒரு சிறந்த நிவாரணம். அதை எப்படி தயார் செய்வது மற்றும் உபயோகிப்பது என்று பார்ப்போம்.
சியா விதை - 1 ஸ்பூன்
பால் - 2 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஸ்பூன் சியா விதையை எடுத்து அதில் 3 ஸ்பூன் பால் சேர்த்து அரை மணி நேரம் நன்கு ஊறவையுங்கள்.
நன்கு ஊறிய பிறகு சியா விதைகளுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து பாஸ் மாஸ்க் பேஸ்ட் தயார் செய்து கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அதன்பிறகு இந்த பேஸ்ட்டை கழுத்திலிருந்து நெற்றி வரையிலும் கீழிருந்து மேலாக அப்ளை செய்யுங்கள்.
அப்படியே 15 முதல் 30 நிமிடங்கள் வரை முகத்தை காய விடுங்கள். பிறகு குளிர்ந்த அல்லது சாதாரண நீர் கொண்டு முகத்தை நன்கு சுத்தம் செய்து வந்தால் முகம் பொலிவாகும்.