நம்மை அழகாக்கும் பொருட்கள் வீட்டு சமையலறையிலேயே உள்ளது தெரியுமா?

Beauty tips
Beauty tipsImage credit - pixabay.com

வெள்ளரித் துண்டு ஒன்றை எடுத்து  முகத்தில் நன்கு தேய்த்து குறிப்பாக கண்களுக்கு கீழே, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட முகத்தில் உள்ள கருமை நீங்கி பளிச்சிடும்.

எலுமிச்சம்பழம் ஒரு மூடி எடுத்து  முகம், கைகள், கழுத்து பகுதிகளில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவி விட பளிச்சென மின்னும்.

காய்ச்சாத பால் இரண்டு ஸ்பூன் எடுத்து காட்டன் பஞ்சில் நனைத்து முகம், கழுத்துப் பகுதி, பின்னங்கழுத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழிவி விட மாசு மருவற்ற சருமம் கிடைக்கும்.

ரெண்டு ஸ்பூன் தயிரை கையில் விட்டு தேய்த்து முகம், கழுத்து, புறங்கை, விரல்கள் ஆகியவற்றில் தேய்த்து மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவ பளிச்சென இருக்கும்.

வாழைப்பழத்தை ஒரு துண்டு எடுத்து கையால் மசித்து முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இப்படி தினம் ஒரு பழத்துண்டு ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், திராட்சை என முகத்துக்கு ஃபேஷியல் பேக் போட சருமம் பளிச்சென மின்னும்.

வெந்தயம் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு கரண்டி தயிரில் அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு இதனை மிக்ஸியில் அரைத்து நீர் கலந்து தலையில் தேய்த்து குளிக்க முடி பளபளப்பாக செழித்து வளரும். முடிக்கு சிறந்த கண்டிஷனராகவும் கூட.

இதையும் படியுங்கள்:
ஜம்முன்னு மணக்கும் ஜவ்வாது பலன்கள் தெரியுமா?
Beauty tips

ஒரு ஸ்பூன் கிரீன் டீத்தூள், ஒரு ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முதலில் கழித்து பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இந்த பேஸ் பேக்கை வாரம் ஒரு முறை போட நம் சருமம் பளிச்சென்று இருக்கும்.

Beauty tips
Beauty tipsImage credit - pixabay.com

துவரம் பருப்பு இரண்டு ஸ்பூன் பச்சை மஞ்சள் ஒரு துண்டு இரண்டையும் சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட கரும்புள்ளி மற்றும் தேமல் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விடும்.

துவரம் பருப்பு கால் கிலோ கோரைக்கிழங்கு 100 கிராம் மஞ்சள் இரண்டு துண்டுகள் ஆகியவற்றை மிஷினில் அரைத்து பவுடராக்கி வைத்துக் கொள்ளவும். இதனை உதட்டின் மேலும் தாடைப் பகுதிகளிலும் இருக்கும் தேவையற்ற முடிகளின் மீது பேஸ்டாக்கி குழைத்து தடவி சிறிது நேரம் கழித்து கடலை மாவு கொண்டு தேய்த்துக் கழுவவும். இதனை வாரம் இருமுறை என ஒரு மாதம் செய்து வர முடிகள் உதிர்ந்து விடுவதுடன் மறுபடியும் புதிதாக முடிகள் முளைக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com