மீன் எண்ணெயை சப்ளிமெண்டுளாக எடுத்துக்கொள்ளும்போது நமது கூந்தல் பல நன்மைகளை பெரும். அந்தவகையில் இவற்றின் நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.
நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உணவு மூலம் எடுத்துக்கொள்வது அவசியம். ஆனால், உணவின் மூலம் எடுத்துக்கொள்ள முடியாதவற்றை சப்ளிமெண்டாக எடுத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஊட்டச்சத்து குறைபாடால் சில ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படும். அவற்றிற்கான சிறந்த சப்ளிமண்ட்தான் மீன் எண்ணெய்.
மீன் எண்ணெய் எடுத்துக்கொள்வதால், ஞாபக சக்தி, சரும ஆரோக்கியம், தெளிவான கண் பார்வை, எலும்பு ஆரோக்கியம், உடை எடை குறைவு போன்ற பல நன்மைகள் கிட்டும். இது பலருக்கும் தெரியும். அந்தவகையில் மீன் எண்ணெய் கூந்தலுக்கு எவ்வளவு நன்மைகள் தருகிறது என்று பார்ப்போம்.
இளநரையை தடுக்கிறது:
மீன் எண்ணெயில் இருக்கும் பொருட்கள் உங்கள் இளநரைக்கு எதிராகப் போராடும். அதாவது ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்கள் காரணமாக செல்களுக்கு ஏற்படும் தீமைகளை இது தடுக்கிறது. ஆகையால் இது இளநரையை தடுத்து உங்கள் இளமையையும் பாதுகாக்கிறது.
பொடுகை குறைக்கிறது:
பலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை பொடுகு தொல்லை. மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு மயிற் கால்களில் உள்ள எரிச்சலைத் தடுத்து பொடுகை குறைக்கிறது. இதனால், முடியின் வேர் வலுவாகிறது.
கூந்தல் பளபளப்பாகிறது:
மேலும் அதே ஒமேகா 3 யால் இது உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. இதனால், முடியும் பளபளப்பாகவும் அழகாகவும் மாறும்.
சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கிறது:
கொழுப்பு அமிலங்களில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உங்களுடைய தோலில் உள்ள செல்களை சூரிய கதிர்களால் ஏற்படும் சேதங்களில் இருந்து பாதுகாத்து முடி வேரை ஆரோக்கியமாக வைக்கிறது.
முடி அடர்த்தி ஆகிறது:
இதனைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் முடி ஆரோக்கியமாகி முடி உதிர்தலை தடுக்கிறது. மேலும் மீன் எண்ணெயில் DHA மற்றும் EPA ஆகிய இரண்டு வலுவான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை தலைமுடி உதிர்வைத் தடுப்பதற்கு மிகவும் அவசியம். இதனால், முடி அடர்த்தியாக வளரும்.
ரத்த ஓட்டம் மேம்படுகிறது:
தலையில் ரத்தம் ஓட்டம் மேம்பட்டு முடி வேர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருகிறது.
மீன் எண்ணெய் எடுத்துக்கொள்வதால், முடிக்கு மட்டுமே இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.