ரோஸ்மேரி எண்ணெய்யின் பயன்கள் என்னென்ன தெரியுமா?

Rosemary oil benefits
Rosemary oil benefitsImage Credits: Epicuren Discovery
Published on

ரோஸ்மேரி செடிகள் பொதுவாக Mediterranean பகுதியில் வளரக்கூடியதாகும். இந்த செடியின் இலை மற்றும் எண்ணெய் பல்வேறு மருத்துவத்திற்கும், உணவிற்கும் பயன்படுகிறது.

பழங்காலத்தில் கிரேக்கம் மற்றும் ரோம்மில் ரோஸ்மேரி நினைவாற்றலை பலப்படுத்துவதற்காக பயன்பட்டது. தற்போதும் இந்த எண்ணெய்யை பயன்படுத்துவது மூலம் நினைவாற்றலை மேம்படுத்தலாம்.

ஆண்களுக்கு திட்டு திட்டாக வரும் வழுக்கையை சரிசெய்வதற்கு ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுகிறது. இதை தொடர்ந்து காலை, மாலை இருவேளை ஆறுமாதம் தடவி வந்தால், முடிவளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரியும். பெண்களுக்கும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

ரோஸ்மேரி எண்ணெய் சிறந்த Pain reliever ஆகவும் பயன்படுகிறது. இந்த எண்ணெய்யை Pesticides ஆக பயன்படுத்தி பூச்சிக்கள், கொசுக்களை விரட்ட முடியும்.

இந்த எண்ணெய்யை தலையில் தடவுவதால், நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். அதனால் முடிவளர்ச்சிக்கு இது பெரிதும் பயன்படுகிறது. இது சூரிய வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. இந்த எண்ணெய்யில் இருக்கும் Anti Bacterial properties ஆக்னியை போக்கும். அதுமட்டுமில்லாமல் சருமத்தை பொலிவாகவும், மிருதுவாகவும் மாற்றக்கூடிய தன்மையை உடையது.

ரோஸ்மேரி எண்ணை Stress, anxietyஐ போக்கி மனதிற்கும், உடலுக்கும் அமைதியான நிலையை தருகிறது. இந்த எண்ணெய்யை பயன்பத்துவதால் ரிலேக்ஸாக இருக்க உதவுகிறது. ரோஸ்மேரி எண்ணெய்யை மேற்பூச்சாக பயன்படுத்தினாலோ இல்லை சாப்பிட்டாலோ செரிமானத்தை மேம்படுத்தும், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்கும்.

இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால், சுவாச பாதையை திறந்து சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா, சளி, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை போக்குகிறது. இதை தூக்கமின்மை, ஒற்றைத்தலைவலி என்று சொல்லப்படும் மையக்ரைன் போன்ற பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
கோயில் மணியில் உள்ள அறிவியல் பற்றி தெரியுமா?
Rosemary oil benefits

ரோஸ்மேரி Aromatherapy மூளை செயல்பாட்டுக்கு பயன்படுகிறது. ரோஸ்மேரி இலையை காயவைத்து பொடியாக்கி  mediterranean இத்தாலி உணவிற்கு Seasoning ஆக பயன்படுத்துவார்கள். இது சூப்பிற்கும், உணவிற்கும் வாசனையை சேர்க்கும்.

உடலில் ஏற்படும் வீக்கம், வலி போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும். Arthritis போன்ற பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. முட்டியிலே ஏற்படும் வலியை போக்க ரோஸ்மேரி எண்ணெய்யை 15 நிமிடம் தடவி மசாஜ் செய்து விடுவது வீக்கத்தை குறைக்கும். ரோஸ்மேரி எண்ணெய்யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி கேன்சர் செல்களை அழிக்கும் ஆற்றலை உடையது என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com