
சிலருக்கு கழுத்தைப் பார்த்தால் அதில் ரேகைகள் இருக்கும். அது வித்தியாசமாக இருந்தால் பலமுறை கவனித்து பார்ப்போம். அதேபோல் உயரமான கழுத்து உள்ளவர்களையும் வித்தியாசமாக பார்க்கத் தோன்றும். அவர்களுக்கு நகைகள் அதிகமாக போட்டால் அழகாக இருக்கும் என்று கூறுவோம். இது நாமாக ரசித்து கூறும் விஷயங்கள். அந்த கழுத்தின் இலட்சணங்கள் கூறும் சாஸ்திரம் என்ன என்பதை பதிவில் காணலாம்.
சிலரின் கழுத்தைப் பார்த்தால் குறுகியதைப் போன்று இருக்கும். கழுத்தின் பின்புறத்தில் ரோமம் எதுவும் இல்லாமல் இருக்கும். அது போன்ற கழுத்தை உடையவர்கள் தனவானாக இருப்பார்கள் என்கிறது இலட்சண சாஸ்திரம்.
நீண்ட கழுத்தை உடையவர்கள் ஏதேனும் ஒரு வகையில் புகழ்பெற்று, அந்தப் புகழின் காரணமாக பெருமையும், மதிப்பும், பணமும் சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள்.
சமுதாயத்தில் நல்ல கௌரவமும், மதிப்பும் கொண்டவர்களாகவும், குற்றம் செய்பவரைத் தண்டிக்கும் அதிகாரம் உடைய நீதிபதிகளாகவும் வழங்குபவர்கள் தான் சங்கை போன்ற கழுத்து அமைந்திருப்பவர்கள்.
கழுத்தில் மேல்நோக்கிய ரேகைகள் இருப்பதை உற்று நோக்குவோம். அது ஏதோ ஒரு விஷயத்தை சொல்கிறது என்று பெரியவர்கள் அடிக்கடி கூறுவதை கேட்டிருப்போம். அதுபோல் கழுத்தில் மேல் நோக்கிய ரேகைகள் இருக்குமானால் அவர்கள் தர்ம சிந்தனை உடையவர்களாகவும், இரக்க மனம் கொண்டவர் களாகவும், இருப்பார்கள். மாலையிட்டதைப்போல கழுத்தைச் சுற்றிலும் ரேகை அமையப் பெற்றவர்கள் செல்வர்களாகவும், பல குடும்பங்களை இரட்சிக்கும் அந்தஸ்தை உடையவர்களாகவும் விளங்குவார்கள் என்கிறது சாஸ்திரம்.
கழுத்து வளர்த்தியாகவும், உயரமாகவும் இருப்பவர்கள் போஜனப் பிரியர்கள்.
சிலர் கழுத்து அமுங்கி இருப்பதை காணலாம். அப்படி அமுக்க பட்டது போன்ற கழுத்து அமைப்பு கொண்டவர்கள் பக்தர்களாகவும், ஆன்மீகத் துறையில் அக்கறை செலுத்துவோர் ஆகவும் இருப்பார்கள். நடுத்தரமாக இருப்பவர்கள் திருக்கோயில் அர்ச்சர்களாகவும், உயர்ந்த நிலையில் அநேக இலக்கியங்களை இயற்றுவோராகவும் இருப்பார்களாம். சொற்பொழிவு ஆற்றுபவருக்கும், பக்திப் பாடல்கள் இயற்றுவோருக்கும் இத்தகைய கழுத்து அமையப் பெற்றிருப்பதைக் காணலாம் என்கிறது கழுத்து லக்ஷன சாஸ்திரம்.