செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

Hair Care tips
Hair Care tips
Published on

ஒரு சிலருக்கு இயற்கையாகவே கூந்தல் கருமையாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால் சிலருக்கு எவ்வளவு தான் தலையில் எண்ணெய் தேய்தாலும் முடி வறண்டு செம்பட்டையாக இருக்கும். செம்பட்டை வருவதற்கு முதல் காரணம் கூந்தலை போதுமான அளவு பராமரிக்காமல் இருப்பது தான்.

செம்பட்டையான கூந்தல் பார்ப்பதற்கு கலரிங் செய்தது போல் இருந்தாலும், நாளடைவில் நரை முடி ஏற்படும். இந்த பதிவில் எளிமையான முறையில் செம்பட்டை நிறம் மறைய என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

கருமையான கூந்தல் பெற:

வறண்ட கூந்தல் உள்ளவர்கள், கூந்தலுக்கு ஈரப்பதம் கொடுக்க கூடிய ஷாம்புவை தேந்தெடுக்க வேண்டும். மேலும் குளிக்க செல்லும் முன் தலையில் எண்ணெய் வைத்து 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் கூந்தல் ஈரப்பதமாக இருக்கும்.

செம்பட்டை முடி உள்ளவர்கள் வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து, இராசாயனம் இல்லாத சீயக்காய் அரப்பு பயன்படுத்தி தலை குளிக்க வேண்டும். 

மரிக்கொழுந்து இலை மற்றும் நிலவாரை இலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி கருமையாக மாறும். நிலவாரை இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் பொடி கிடைக்கும்; வாங்கி பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய் விதை நீக்கி நிழலில் உலர்த்தி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து வர முடி கருமை நிறம் கொடுக்கும்.

மேலும் ஆலிவ் எண்ணெயை முடியின் வேர்ப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முட்டையின் வெள்ளை கருவை கூந்தல் வேர்ப்பகுதி மற்றும் நுனிவரை தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை நிறம் மறையும். 

மருதாணி, செம்பருத்தி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெயில் இந்தப் பொடியை கலந்து கொதிக்க வைத்து தினமும் தலைமுடியில் வேர்க்காலில் தொடர்ச்சியாக தேய்த்து வர செம்பட்டை நிறம் மறையும். 

வெந்தய பொடி, தயிர், கற்றாழை ஜெல், நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து முதல் நாள் இரவு ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் இந்தக் கலவையை தலையில் மசாஜ் செய்து குளித்து வர செம்பட்டை நிறம் மறையும். 

இதையும் படியுங்கள்:
ஒத்தையா உள்ள முடி கத்தையா வளரணுமா? இதை ட்ரை பண்ணுங்க!
Hair Care tips

ஆலமரத்தின் இளவேர் எடுத்து நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தேய்த்து வர செம்பட்டை நிறம் மறையும். இதனுடன் வைட்டமின் E கேப்சூல் பயன்படுத்தலாம்.

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கரிய பவளம் வாங்கி அதை வாணலியில் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு தலையில் தேய்த்து குளித்தால் செம்பட்டை நிறம் மறையும். வாரத்திற்கு இரு முறை தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் செம்பட்டை நிறம் மறைந்து கருமையான கூந்தல் கிடைக்கும். தாடி, மீசையில் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com