முகம் எப்போதும் பளபளப்பாக, வசீகரமாக இருக்க வேண்டுமா?
முகம் எப்போதும் பளபளப்பாக, வசீகரமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கீழ்சொன்ன குறிப்புகளை செயல்படுத்துங்கள்.
புதினாவை தயிரில் சேர்த்து அரைத்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.
முட்டையின் வெள்ளைக்கரு, வெள்ளை வெங்காயம், மருதாணி ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூசினால் முக வசீகரம் அதிகரிக்கும்.
தக்காளியை நறுக்கி, முகத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.
வெள்ளரிக்காயை சிப்ஸ் போல சீவி கண்களுக்கு கீழே வைத்தால் கருவளையம் மறைந்துவிடும்.
கோடை காலத்தில் மோரைத் துணியால் முக்கி, முகத்தில் தேயுங்கள். முக மினுமினுப்பு அதிகரிக்கும்.
பாலில் எலுமிச்சை பழச்சாறை கலந்து முகத்தை அடிக்கடி கழுவி வர முகம் பொலிவு பெறும்.
ஆப்பிளை கூழ் போலாக்கி முகத்தில் பூசுவது முக வனப்புக்கு நல்லது.
தக்காளியை நறுக்கி, மூக்கின் நுனியில் இருக்கும் கருமபுள்ளிகள் மேல் தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் மறைந்துவிடும்.
அரை தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு, ஐந்து சொட்டு தேன் மற்றும் சிறிது பார்லி தூளுடன் கலந்து முகத்தில் தடவலாம். இது சிறந்த இயற்கை ப்ளீச்.
பப்பாளி எந்த வகை சருமத்துக்கும் நல்லது. நம்முடைய சருமத்தின் மீது படிந்திருக்கும் இறந்துபோன செல்களை நீக்கி, சருமத்தை மேலும் மென்மையாக்க தக்காளி பயன்படுகிறது. பப்பாளியை ஒரு சிறந்த பேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.
ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி, ஈரமான விரல்களால் தேய்த்து கழுவினால் முகத்தில் உள்ள பருக்கள் அகலும்.
ஆரஞ்சுத்தோலை நிழலில் உலர்த்தி பொடி செய்து, முகம் டல்லாக இருப்பதாக நீங்கள் உணரும்போது ஒரு சிட்டிகை பொடியை எடுத்து, அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்துக் குழைத்து முகத்தில் பூசவும். இந்த பேஸ் பேக் உலர்ந்ததும் முகம் கழுவிப் பாருங்கள். அப்புறம் தெரியும் ஆரஞ்சு செய்யும் மாயாஜாலம்.