இனி நரை முடி பிரச்சனைக்கு டை அடிக்க வேண்டாம்..! 90ஸ் கிட்ஸ் ஃபேவரட் ஹேர் டை இருக்கு..!

Hair care tips
Hair care tips
Published on

தற்போது உள்ள இளைஞர்களுக்கு எவ்வளோ பிரச்சனைகள் இருந்தாலும் அதில் முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி தான். அதிலும் முக்கியமாக 90ஸ் கிட்களுக்கு சொல்லவே வேண்டாம். காரணம் ஒருபுறம் அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்துக்கொண்டு இருக்க, மற்றொரு புறம் முடி உதிர்வு மற்றும் முடி நரைத்து மொத்த தலை முடியும் வெள்ளை நிறத்தில் மாறி அவர்களை இன்னும் மனக்கவலை அடையச் செய்கிறது.

வயது முதிர்வினால் தலையில் உள்ள முடிகள் நரைத்து போவது இயல்பான ஒன்று. ஆனால் சிறுவயதிலேயே ஒரு சிலருக்கு முடிகள் நரைத்து காணப்படும். இளைஞர்களுக்கும் நரை முடி காணப்படும். இதனை தடுப்பதற்கு அவர்கள் சந்தையில் விற்கப்படும் ஹேர் டை என அனைத்தும் பயன்படுத்தி கடைசியில் அதுவே அவர்களுக்கு மற்ற சரும நோய்கள் வருவதற்கு காரணமாக அமைந்துவிடும். நாம் இந்த பதிவில் இளநரை ஏன் ஏற்படுகிறது. மேலும் நரை முடியை இயற்கையான முறையில் எவ்வாறு தடுக்கலாம் என காண்பாேம்.

இளநரை வருவதற்கான காரணம்:

இளநரை வருவதற்கு முதல் காரணம் மரபணு மாற்றம் ஆகும். தலைமுறை தலைமுறையாக பெற்றோர்கள், அதன் பிறகு அவர்களின் பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. நமது உடலில் உள்ள பல மரபணுக்கள் ஒவ்வொரு வேலைகளை செய்கிறது. இதில் முடிக்கு நிறமளிக்கும் ஐஆர்எஃப் 4 எனப்படும் மரபணு முடிக்கு கருமை நிறத்தை உற்பத்தி செய்யக்கூடியது. அதவாது கருமை நிறத்தை உற்பத்தி செய்யும் மெலனின் (Melanin) என்னும் நிறமியை உற்பத்தி செய்யும். இந்த மரபணுவில் மாற்றம் ஏற்படும் போது சிறுவயதில் இளநரை ஏற்படுகிறது.

அடுத்தது உடலின் வளர்ச்சிக்கு தேவைப்படும் ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி சரிவர சுரக்காமல் போவதாலும் இளநரை பிரச்சனை ஏற்படுகிறது.

மற்ற காரணங்கள்:

ஒரு சிலருக்கு தங்களின் இளமை பருவத்தில் நரை முடி வரும். ஆரம்பத்தில் இதனை கண்டுக்கொள்ளாமல் விட்டால் அது நாளடைவில் அதிகமாகி விடும். இதற்கு நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம். அதாவது உணவில் அதிகமான வெள்ளை சர்க்கரை சேர்த்துக்கொள்வதால் நரை முடி ஏற்படுகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நமது உடலுக்கு கிடைக்காததால் நரை முடி ஏற்படுகிறது. வழக்கமான பழக்க வழக்கங்களில் மாறுதல் ஏற்பட்டால் நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களிலும் பல மாற்றங்கள் ஏற்படும். இதனால் கூட இளநரை ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தலையில் தயிரைத் தொடர்ந்து தடவி வர என்ன ஆகும் தெரியுமா?
Hair care tips

90ஸ் கிட்ஸ் ஹேர் டை:

அது என்ன 90ஸ் கிட்ஸ் ஹேர் டை? அது தான் கரும்பூலா செடி. இன்னும் புரியும் படியாக சொல்ல போனால் இங்க் காய் செடி. இந்த செடியை கிராமங்களில் வளர்ந்தவர்கள் அதிகமாக பார்த்திருப்பார்கள். இந்த செடியில் காய்க்கும் காய் பார்பதற்கு ஒரு பெரிய மிளகு போன்ற அமைப்பில் காணப்படும். அதனை கையால் நசுக்கினால் இங்க் நிறத்தில் கைகள் எல்லாம் கருப்பாக அதவாது கரு ஊதா நிறத்தில் மாறிவிடும்.

சிறுவயதில் இதனை இங்க் காய் என நினைத்து பறித்து விளையாடி இருப்போம். ஆனால் இதன் மருத்துவ பயன்கள் அதிகம். முக்கியமாக இந்த செடியின் இலை மற்றும் காய் அதாவது பழம் நரை முடிக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

பயன்படுத்தும் முறை:

பெண்கள் தங்களின் கூந்தல் மிருதுவாக இருப்பதற்காக பலவகையான ஷாம்புகளை பயன்படுத்துகிறார்கள். இதில் உள்ள ஹைட்ரஜன் பேரொட்சைடு (hydrogen peroxide) முடி உதிர்வை ஏற்படுத்தும். இந்த கரும்பூலா இலையை அரைத்து அதன் சாறை பிழிந்து எடுத்து அதனை தலை முடியின் அடி வரை தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து அதன்பின் தலை குளித்து வர முடி மிருதுவாக இருக்கும்.

மேலும் கரும்பூலா செடியின் இலை மற்றும் காய், கனிகளை பறித்து, அதனுடன் செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, நெல்லிக்காய் ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெய் போட்டு காய்ச்சி, பிறகு வெயிலில் காய வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருமையாக வளரும். முக்கியமாக திடீரென்று தோன்றிய நரை முடி மறைந்து கருமையாக மாறிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com