உலர் உச்சந்தலையும் (Dry scalp) பொடுகும் ஒன்றா? வேறு வேறா?

Dry scalp and dandruff?
hair imaages...Image credit - pixbaya
Published on

லரும் ட்ரை ஸ்கேல்ப் எனப்படும் உலர்ந்த உச்சந்தலையும் பொடுகும் ஒன்று என்று நினைத்து குழப்பிக் கொள்கிறார்கள்‌. ஆனால் இரண்டும் வேறு வேறு. அவை ஏன் தலையில் ஏற்படுகின்றன என்பதற்கான காரணங்களையும் இந்த பதிவில் பார்ப்போம்.

மக்களின் குழப்பத்திற்கு காரணங்கள்;

உலர் உச்சந்தலை மற்றும் பொடுகு இரண்டும் உச்சந்தலையில் செதில்கள், அரிப்பு மற்றும் சிவத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனால் இரண்டும் ஒன்று என்று மக்கள் நினைக்கிறார்கள்.

உலர்ந்த உச்சந்தலையின் செதில்கள், பொடுகு செதில்களைப் போலவே தோன்றும். சிலருக்கு பொடுகு மற்றும் டிரை ஸ்கேல்ப் இரண்டுமே இருக்கலாம். அதனால் ஒன்றை ஒன்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.

பொடுகிற்கும், டிரை ஸ்கேல்ப் பிற்கும் உள்ள வித்தியாசங்களும் காரணங்களும்;

பொடுகு என்றால் என்ன? உலர் உச்சந்தலை என்றால் என்ன?

டிரை  ஸ்கேல்ப் என்பது உச்சந்தலையில் ஈரப்பதம் இல்லாத ஒரு நிலையைக் குறிக்கிறது. இது செதில் மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது. பொடுகு என்பது ஒரு குறிப்பிட்ட வகை பூஞ்சைத் தொற்று ஆகும். இது தலையில் அரிப்பை ஏற்படுத்தும் செதில்கள் போலவே தோற்றமளிக்கும்.

பொடுகும் டிரை ஸ்கேல்ப்பும் தோன்றுவதன் காரணங்கள்;

வறண்ட காற்று;

கடுமையான ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஷாம்புகள்,  தலைமுடியை அதிகப்படியான வெப்ப சிகிச்சைக்கு உட்படுத்துவது, ஹேர் டிரையர் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் வறண்ட உச்சந்தலை ஏற்படும்.  உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களை உண்ணும் ஈஸ்ட் போன்ற பூஞ்சைகளால் பொடுகு ஏற்படுகிறது.

தோற்றம்;

வறண்ட ஸ்கேல்ப் உள்ளவர்களுக்கு, செதில்கள் பொதுவாக சிறியதாகவும் பொடுகு செதில்கள் பெரியதாகவும் இருக்கும். அவை வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

அரிப்பு;

வறண்ட உச்சந்தலையில் அரிப்பு ஏற்படலாம். ஆனால் பொடுகு ஏற்படுத்தும் அரிப்பை விட குறைவாக இருக்கும். மேலும் இது கடுமையானதாகவும் இருக்கும்.

சிவத்தல்;

பொடுகு உச்சந்தலையில் சிவத்தல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் வறண்ட உச்சந்தலையில் சிவத்தலின் தன்மை குறைவாக இருக்கும்.

தோன்றும் இடம்;

வறண்ட உச்சந்தலை ஏற்படுத்தும் செதில்கள் உச்சந்தலையில் மட்டும் காணப்படும். பொடுகு செதில்கள் உச்சந்தலையிலும் தலை முழுக்கவும் இருக்கும். பொடுகு, உச்சந்தலையில் தீவிர உணர்திறனை ஏற்படுத்தும். ஆனால் உலர்ந்த உச்சந்தலையில் உணர்திறன் இருக்காது.

முடி அமைப்பு;

பொடுகு நேரடியாக முடி அமைப்பின் பாதிக்காது. ஆனால் வறண்ட உச்சந்தலை  முடியை உடையக்கூடியதாக மாற்றிவிடும்.

சிகிச்சை;

பொடுகுத்  தொற்றுக்கு பூஞ்சைக் காளான் சிகிச்சைகள் தேவைப்படும். வறண்ட உச்சந்தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவினாலே நிலைமை சீராகும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் செய்யக்கூடிய சுவையான 11வகை ஆரோக்கியமான இனிப்புகள்!
Dry scalp and dandruff?

பொடுகும் டிரை  ஸ்கேல்ப்பும் வராமல் இருக்க என்ன நடவடிக்கைகள் தேவை?  உச்சந்தலையை வறண்ட நிலையில் வைக்காமல், தினமும்  தேங்காய் எண்ணெய் தடவவும்.  வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்து முடியை சுத்தமாக வைத்திருந்தாலே பொடுகும்  வறண்ட உச்சந்தலையும் ஏற்படாது.

அதே சமயம் சீரான உணவுப் பழக்கம், நிம்மதியான உறக்கம், தேவையான அளவு நீர் அருந்துதல், மனஅழுத்தம் இன்றி இருத்தல் போன்றவையும் அவசியம் தேவை. அடிக்கடி முடிக்கு கலரிங் செய்வது, ஹேர் டிரையர்கள் பயன்பாடு, ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது போன்றவற்றை தவிர்த்தாலே முடி ஆரோக்கியமாக இருக்கும்.

தலைக்கு ஷாம்பு போடாமல், அரப்பு சிகக்காய் பவுடர் போட்டுக் குளிக்கவும். அல்லது மிகவும் மைல்டான ஷாம்பு போடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com