உதடுகளைச் சுற்றி உள்ள கருமையை நீக்குவதற்கான வழிமுறைகள்! 

Darkness Around the Lips
உதடுகளைச் சுற்றி உள்ள கருமையை நீக்குவதற்கான வழிமுறைகள்! 

உதடுகளைச் சுற்றியுள்ள கருமை பெரும்பாலும் Hyperpigmentation அல்லது Lip Discoloration என சொல்லப்படுகிறது. இது பல நபர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினையாகும். சூரிய ஒளி, ஹார்மோன் மாற்றங்கள், புகைபிடித்தல் மற்றும் சில மருந்துகள் போன்றவற்றால் இது ஏற்படலாம். இந்த பதிவில் அத்தகைய கருமையை நீக்குவதற்கான சிறந்த வழிகள் பற்றி பார்க்கலாம். 

சூரிய பாதுகாப்பு: தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து உங்கள் உதடுகளைப் பாதுகாப்பதால், உதட்டை சுற்றி இருக்கும் கருமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். வெளியே செல்லும்போது SPF அளவு அதிகம் கொண்ட லிப் பாம் அல்லது லிப்ஸ்டிக் பயன்படுத்தவும். மேலும் உதட்டில் நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாக்கவும். 

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் பொருளாகும். இது உதடுகளைச் சுற்றியுள்ள கருமையான பகுதிகளை ஒளிரச் செய்யும். எலுமிச்சை சாறு பிழிந்தெடுத்து அதை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து வெந்நீரில் கழுவி விடவும். தொடர்ச்சியாக இப்படி செய்யும் பட்சத்தில், கருமை கொஞ்சம் கொஞ்சமாக மங்க ஆரம்பிக்கும். 

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் இயற்கையான ப்ளீச்சிங் என்சைம்கள் உள்ளன. அவை உதடுகளின் நிறமாற்றத்தைக் குறைக்க உதவும். உருளைக்கிழங்கை மெல்லியதாக நறுக்கி கருமை உள்ள பகுதிகளில் தேய்க்கவும். தினமும் இப்படி செய்து வந்தால் காலப்போக்கில் கருமை நிறம் மாறுவதை நீங்கள் கவனிக்கலாம். 

கற்றாழை ஜெல்: கற்றாழையில் சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகள் உள்ளன. அவை உதடுகளை சுற்றியுள்ள கருமையைக் குறைக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதளவு கற்றாழை ஜெல் அல்லது கற்றாழை அடிப்படையிலான கிரீம் தடவினால், நல்ல தீர்வு கிடைக்கும். 

தேன் மற்றும் பாதாம் எண்ணெய்: தேன் மற்றும் பாதாம் எண்ணெய் கலவையானது உதடுகளைச் சுற்றியுள்ள சருமத்திற்கு ஊட்டமளித்து ஒளிரச் செய்யும். தேன் மற்றும் பாதாம் எண்ணெயை சம பங்கில் கலந்து, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இதை தொடர்ச்சியாக செய்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் நீங்கும். 

நீரேற்றத்துடன் இருங்கள்: தினசரி போதிய அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நமது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் அவசியம். எனவே தினசரி போதிய அளவு தண்ணீர் குடித்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் சீரான ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை உட்கொள்ளவும். இதனால் இயற்கையான பளபளப்பை நீங்கள் பெறலாம். 

புகைப்பிடிக்க வேண்டாம்: உங்களுக்கு புகைப் பழக்கம் இருந்தால் அதை உடனடியாக நிறுத்துங்கள். ஏனெனில் புகைப் பழக்கம் உதடுகளின் நிறமாற்றத்தை மேலும் மோசமாக்கும். மேலும் மற்ற பிற சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். புகையிலை இருக்கும் ரசாயனங்கள் உதட்டை சுற்றியுள்ள கருமையை அதிகரித்து, எரிச்சலையும் ஏற்படுத்தும்.

உங்களது சராசரி சருமப் பராமரிப்பில் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை இணைப்பது மூலமாக, உதட்டு கருமையை நீங்கள் எளிதாக நீக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com