இந்த 4 DIY Face Masks உங்க சருமத்தில் ஏற்படும் Tan-களை நீக்க உதவும்!

Tan problem
Tan problemimg cre: India TV News

சூர்ய ஒளியினால் உதட்டுக்கு மேல் மற்றும் கண்களுக்கு கீழ் படியும் கருப்பு நிறத்திற்கு பெயர்தான் Tan (டேன்).  சிலருக்கு இது முகம் முழுவதும் படிந்து சருமைத்தை பொலிவிழக்கச் செய்துவிடும். இந்த டேன் உண்டாவதற்கு சூர்ய ஒளி மட்டும் காரணமாகாது. முகச் சருமத்தில் வைட்டமின் டி அளவு குறைவாகும்போதும் இந்த பிரச்சனை ஏற்படும். இந்த டேனைப் போக்க இப்போது பல வகையான அழகு சாதனப் பொருட்கள் வந்தாலும் வீட்டில் இயற்கை பொருட்களை வைத்து செய்யும் மாஸ்க் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்க உதவும். அந்தவகையில் வீட்டிலேயே இயற்கை பொருள்களை வைத்து செய்யும் DIY Face mask பற்றி பார்ப்போம்.

 1. க்ளிஸரின் Face Mask:

இந்த face mask செய்ய முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் அதே அளவு எலுமிச்சை சாறு கலந்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு க்ளிஸரின் சேர்க்கவும். இந்த மூன்றுப் பொருட்களையும் நன்றாகக் கலந்து 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிட்டு ஒரு 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவாக இருக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறைகள் தொடர்ந்து செய்தால் நல்ல பலனைத் தரும்.

2. வாழைப்பழம் Face Mask:

ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பால், பாதி வாழைப்பழம் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் அரைக்க வேண்டும்.

பின்னர் உங்கள் முகத்தை க்ளென்ஸர் பயன்படுத்தி கழுவிவிட்டு அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். காய்ந்தப் பிறகு மிதமான சுடு நீரில் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.

இதையும் படியுங்கள்:
இந்த 3 பொருட்கள் உங்கள் முகம் மற்றும் கைகளில் உள்ள சுருக்கங்களை நீக்கும்! 
Tan problem

3. கடலை மாவு Face Mask:

இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்க வேண்டும். பின்னர் அதனை முகத்தில் தடவி பாதி அளவு காய்ந்தப் பின்னர் அதாவது ஒரு 10 நிமிடங்கள் காய வைத்தப் பின்னர் கழுவ வேண்டும் . இதனை ஒரு வாரத்திற்கு தினமும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலனைத் தரும்.

4. தேன் Face Mask:

இது மிகவும் எளிதான முறையில் செய்யப்படும் ஒரு face mask. இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தயிர் மற்றும் தேன் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். பின்னர் நன்றாக காய்ந்தப் பின்னர் கழுவினால் உடனே நல்ல பலனைத் தரும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் பயன்படுத்தினாலே முகத்தில் ஏற்பட்ட டேன் முழுவதுமாக நீங்கிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com