இனி ஒரு நகையில் இரண்டு டிசைன்கள்..! ரிவர்ஸபில் அணிகலன்களின் பயன்!

ரிவர்ஸிபல் நகைகள்
ரிவர்ஸிபல் நகைகள்

ரிவர்ஸபில் நகைகள் என்ற பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். முதலில் ரிவர்ஸபில் நகை எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

ரிவர்ஸபில் நகைகள் ஒருபுறம் முழுவதுமாக வேறு வடிவமைப்புடனும் மறுபுறம் வேறு வடிவமைப்புடனும் இருக்கும். அதவாது ஒரு அணிகலன் இரண்டு முகங்களைக் கொண்டதாக இருக்கும். அதேபோல் தனித்துவமாகவும் அழுத்தமான வடிவமைப்புகளுடனும் கண்களைப் பறிக்கும் வகையில் வெவ்வேறு நிறங்களைக் கொண்டதாகவும் இருக்கும். நகையின் உட்புறத்தில் ஒரு நிறமும் வெளிப்புறத்தில் அதற்கு நேர்மாறான நிறத்திலும் இருக்கும்.

ரிவர்ஸபில் நகையின் வரலாறு:

ரிவர்ஸபில் நகைகள் முதலில் பிச்சியோத்தி என்ற வடிவமைப்பில் இருந்துதான் வளர்ச்சி பெற்றது. 1967ம் ஆண்டு இத்தாலியில் பிச்சியோத்தி என்பவர் பிச்சியோத்தி நகை வடிவமைப்பைக் கண்டுப்பிடித்தார். 55 வருடங்களுக்குப் பின் இப்போதுதான் பிச்சியோத்தி தலைமையில் இந்த ரிவர்ஸபல் நகை கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. ஆறு வருடங்களுக்கு முன்னரே இந்த ரிவர்ஸபில் யோசனை பிச்சியோத்திக்கு தோன்றியது. ஆனால் இந்த வருடம் மார்ச் மாதம்தான் மக்கள் விருப்பப்படி பிச்சியோத்தி ரிவர்ஸபில் ஆபரணம் உருவானது. அதனை ஜூன் மாதம் தான் அரசு அங்கீகாரத்துடன் விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இதனைப் பற்றி பிச்சியோத்தி கூறியதாவது, `பல வருடங்களாக பெண்கள் கூறும் ஒரு விஷயம் , எப்போதும் ஒரே மாடல் அணிவது போலவே தோன்றுகிறது, தினமும் அதனையே அணிய மிகவும் சலிப்பாக இருக்கிறது எனறுதான். அதனால்தான் அவர்களுக்கென்று இரு வடிவமைப்புகளில் இரண்டு முகங்கள் கொண்ட இந்த ரிவர்ஸிபல் நகைகளை கண்டுப்பிடித்தேன்` என்று கூறினார்.

ரிவர்ஸிபல் நகைகள்
ரிவர்ஸிபல் நகைகள்

இதனுடைய முழு வளர்ச்சி இருபக்க வடிவமைப்பைத் தாண்டியும் சென்றது. அதாவது ஒரு பக்கம் வைரத்தாலும் மறுப்பக்கம் தங்கத்தாலும் செய்யப்பட்டது. இதனால் நாம் அணியும் ஆடைக்கு ஏற்றவாறு எந்த நகை அணிய விரும்புகிறோமோ அதை அணிந்து கொள்ளலாம். இது நெக்லஸிற்கு மட்டுமல்ல மோதிரம், ப்ரேஸ்லேட், தோடு ஆகியவற்றிற்கும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

நெக்லஸிற்கு என்றால் திருப்பி அணிந்துக்கொள்ளலாம். ஆனால் மோதிரம், ப்ரேஸ்லைட்டை எப்படி  அணிவது என்ற சந்தேகம் வரும். மோதிரம், ப்ரேஸ்லேட்டின் இரண்டு வளையங்கள் இருப்பது போல் செய்யப்பட்டிருக்கும். அந்த இணைப்பை மாற்றி பயன்படுத்தினால் இரண்டாவது வடிவமைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் ஒரே வைரம் மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நகைக்கு நடுவில் வெவ்வேறு நிறத்தில் கற்கள் வைத்தும் இந்த ரிவர்ஸபில் நகைகள் தயாரிக்கப் படுகிறது.

இதையும் படியுங்கள்:
இரும்புச்சத்தை சமன்படுத்தும் கத்தரிக்காய்!
ரிவர்ஸிபல் நகைகள்

இத்தாலியில் ஆரம்பித்து உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகி வரும் இந்த நகையை எகிப்தியர்களே அதிகம் விரும்பி அணிகின்றனர். இது தயாரிக்கப்பட்ட புதிதில் அதிக விலைக்கு விற்கபட்டதால் அனைவராலும் வாங்க இயலவில்லை. ஆனால் பிற்பாடு அனைத்து வர்க்கத்தினரும் விரும்பக்கூடிய ஒன்றாக மாறியதால் விலையும் அவர்களுக்கு ஏற்றவாறு மாறியது. சில சமயம் தங்க விலை பொருத்தே ரிவர்ஸபில் விலையும் இருக்கும். ஒருபுறம் வைரம் மறுபுறம் தங்கம் விற்பனையாவதை விட இரண்டு பக்கமும் தங்கம் பயன்படுத்தி வெவ்வேறு வடிவமைப்பில் இருப்பதே அதிகம் விற்பனையாகுகிறது.

ஒரே விலையில் இரண்டு நகைகளைப் பயன்படுத்த உதவும் இந்த ரிவர்ஸபில் நகை அனைத்து வர்க்கத்தினருக்கும் ஏற்ற நகையே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com